ஹோம் /நியூஸ் /கன்னியாகுமரி /

'புலித்தோல் இருக்கா?' போன் போட்ட வனத்துறை.. 15 லட்ச பேரத்தில் சிக்கிய கடத்தல் கும்பல்!

'புலித்தோல் இருக்கா?' போன் போட்ட வனத்துறை.. 15 லட்ச பேரத்தில் சிக்கிய கடத்தல் கும்பல்!

புலி தோல் விற்பனை - 4 பேர் கைது

புலி தோல் விற்பனை - 4 பேர் கைது

புலி தோல் வாங்குவது போல் நடித்து நால்வரையும் வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Kanniyakumari (Kanyakumari) | Kanniyakumari

  கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் புலித்தோல் விற்பனை செய்த 4 பேரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில்  புலித்தோல் கடத்தி விற்பனை செய்யப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

  அதன் பேரில்  வனத்துறை அதிகாரிகள் ரகசிய விசாரணை மேற்கொண்டபோது, நாகர்கோவில் அருகே நல்லூர் பகுதியை சேர்ந்த  ரமேஷ் என்பவர் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த ராஜா , இமானுவேல் மற்றும் ஜெயகுமார் ஆகியோருடன் சேர்ந்து புலி தோல் விற்பனை செய்வதாக தெரிய வந்ததுள்ளது.

  இதனைத்தொடர்ந்து  புலித்தோல் வாங்கும் நபர்கள் போல் நடித்து சம்பந்தப்பட்ட ரமேஷிடம் வனத்துறை அதிகாரிகள் தொடர்பு கொண்டு 15 லட்சம் ரூபாய் பேரம் பேசி நாகர்கோவில் வரவழைத்துள்ளனர்.

  நாகர்கோவிலில் புலித்தோலுடன் வந்தவர்களை வனத்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 4 பேரையும்   சிறையில் அடைத்தனர். மேலும்  கைதானவர்களிடம் இருந்து சுமார் 2.5 கிலோ எடை கொண்ட புலி தோல் பறிமுதல் செய்யப்பட்டது.

  செய்தியாளர்: ஐ.சரவணன், நாகர்கோவில்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Kanniyakumari, Nagercoil, Tiger