கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் மீனவ கிராமத்தில் வீட்டில் தனியாக இருந்த தாயும் மகளையும் அயண் பாக்ஸ்சால் தலையில் அடித்து கொலை செய்த சம்பவம் கொலையாளிகளின் முக்கிய தடயமாக கிடைத்த மங்கி குல்லாவை வைத்து வீடியோவை டி.எஸ்.பி வெளியிட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ஆன்றோ சகாயராஜ் மீன்பிடி தொழிலாளியான இவருக்கு பவுலின் மேரி என்ற மனைவி இருந்தார். மேலும், அலன், ஆரோன் என இரண்டு மகன்களும் உள்ளனர். ஆன்றோ சகாயராஜ் மற்றும் மூதத மகன் அலன் ஆகியோர் வெளிநாட்டில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர் இளைய மகன் ஆரோன் சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார்.
இந்நிலையில், மனைவி பவுலின்மேரி அவரது தாயார் திரேசம்மாள் உடன் முட்டம் பகுதியில் ஆள் அரவமற்ற பல ஏக்கர் விவசாய நிலத்திற்கு நடுவே அமைந்துள்ள பங்களா வீட்டில் தனியாக வசித்து வந்தனர். கடந்த 6ஆம் தேதி இரவு தாய் திரேசம்மாள் மற்றும் மகள் பவுலின் மேரி உறவினர் ஒருவரிடம் செல்போனில் பேசி விட்டு தூங்க சென்றதாக தெரிகிறது.
அடுத்த நாள் காலை 7ஆம் தேதி அவர்கள் மீண்டும் பவுலின் மேரியை செல்போனில் தொடர்பு கொண்ட போது, பதிலளிக்காத நிலையில் உறவினர்கள் 7ஆம் தேதி மதியம் நேரடியாக வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது வீட்டின் கதவு பூட்டிய நிலையில் ஆள் அரவமின்றி காணப்பட்டதால் சந்தேகமடைந்த அவர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.
அப்போது தாயும் மகளும் வீட்டின் நடு தளத்தில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளனர். உடனடியாக அவர்கள் வெள்ளிச்சந்தை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்து வெள்ளிச்சந்தை போலீசார் விசாரணை நடத்திய நிலையில், நெல்லை சரக டிஐஜி பிரவேஷ் குமார், எஸ்.பி.ஹரி கிரண் பிரசாத் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்ததோடு கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் அந்த பங்களா வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள் முதலில் வீட்டிற்கு வெளியே இருந்த மின்சார மீட்டரை உடைத்து மின்சாரத்தை துண்டித்து விட்டு, பின்னர் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து வீட்டிற்குள் சென்றதோடு வீட்டில் இருந்த அயண் பாக்ஸ்சால் தாய் மற்றும் மகளை தலையில் கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளனர்.
அத்துடன், பவுலின் மேரி கழுத்தில் கிடந்த 11 சவரன் தாலி சங்கிலி, தாய் திரேசம்மாள் கழுத்தில் கிடந்த 5 சவரன் தங்க சங்கிலி என 16 சவரன் தங்க நகைகளை அறுத்த மர்ம நபர்கள், அவர்கள் அணிந்திருந்த மோதிரத்தையோ காதணிகளையோ எடுக்காமல் வீட்டில் இருந்த பீரோக்களையும் உடைத்து, நகைகளை திருட முயற்சி செய்யாமல் வீட்டிற்கு வெளியே வந்து மீண்டும் கதவை பூட்டி தப்பியோடியுள்ளனர்.
இதனால், 70-சவரனுக்கு மேற்பட்ட தங்க நகைகள் தப்பியதாக தெரிகிறது. ஆனால் மர்ம நபர்கள் கொள்ளையடிக்க திட்டம் போட்டு தாயும் மகளையும் கொலை செய்தார்களா?, இல்லை வேறேதும் காரணமா என முழு விபரம் தெரியாமல் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மர்ம நபர்களை பிடிக்க குளச்சல் உட்கோட்ட டி.எஸ்.பி. தங்கராமன் மேற்பார்வையில் 5-தனிப்படைகளை அமைத்து நெல்லை சரக டிஜஜி பிரவேஷ்குமார் உத்தரவிட்டார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக கொலையாளிகள் குறித்த எந்த ஆதாரங்களோ தடயங்களோ சிக்காத நிலையில், இரண்டு தனிப்படை போலீசார் கொலை நடந்த பங்களா வீட்டில் இரண்டு நாட்களாக முகாமிட்டு தடயங்கள் மற்றும் ஆதாரங்களை சேகரித்து வந்தனர். இந்நிலையில், தற்போது அந்த பங்களா வீட்டின் அருகே உள்ள தென்னந்தோப்பில் இருந்து குளிர் பிரதேசத்தில் வசிப்போர் பயன்படுத்தும் மங்கி குல்லா ஒன்றை கைப்பற்றியுள்ளனர்.
இதனால் கொலையாளி ஒருவராக இருக்கலாம் என்றும், அந்த நபர் உள்ளூர் நபராக கூட இருக்கலாம் எனவும் சந்தேகித்து வரும் நிலையில், கொலை செய்யப்பட்ட பவுலின் மேரியின் கையில் அகப்பட்டிருந்த கொலையாளியின் தலை முடியையும் டி.என்.ஏ. மரபணு சோதனைக்கு அனுப்பி, அதன் அடிப்படையிலும் விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
Must Read : தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் உயர்கிறதா? புதிய கட்டணம் பரிந்துரை
மேலும், கொலை நடந்த பகுதியில் அவ்வப்போது முகாம் இடும் முட்டம் பகுதியை சேர்ந்த கஞ்சா கும்பலை சேர்ந்த சிலர் போலீசாரின் கண்காணிப்பு வளையத்திற்குள் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது குளச்சல் உட்கோட்ட டி.எஸ்.பி. தங்கராமன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், கொலையாளிகள் குறித்த முக்கிய தடயமாக மங்கி குல்லா ஒன்று கிடைத்துள்ளதாகவும் அதை யாரேனும் விற்பனை செய்திருந்தாலும், இது குறித்து பொதுமக்களுக்கு தெரிந்தாலும் தகவல் தெரிவிக்குமாறு வீடியோ வெளியிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kanyakumari, Murder case