கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த தாய் திரேசம்மாள், மகள் பவுலின் மேரி ஆகியோரை அடித்து கொலை செய்த மர்ம நபர்கள் அவர்கள் கழுத்தில் கிடந்த 21 சவரன் தாலி சங்கிலி மற்றும் நகைகளை கொள்ளையடித்து தப்பியோடியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து வெள்ளிச்சந்தை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிசந்தை அருகே முட்டம் மீனவ கிராமத்தினை சாந்தவர் அன்றோ சகாயராஜ் இவரது மனைவி பவுலின் மேரி வயது (48) மற்றும் இரு மகன்கள் உள்ளனர் . இரு மகன்களும் சென்னையில் படித்து வருகின்றனர். அன்றோ சகாயராஜ் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். பவுலின் மேரி அவரது தாய் தெரசம்மாளுடன் (வயது 82) முட்டத்தில் வசித்து வந்தார்.
நேற்று அவர்களது உறவினர்கள் பவுலின் மேரி செல்போனில் அழைத்த போது பதில் இல்லை. பல முறை முயற்சி செய்தும் செல்போனில் தொடர்பு கொள்ள முடியாத நிலையில், நேரடியாக வீடிற்கு வந்து பார்த்துள்ளனர். அங்கு மின்சார இணைப்பு பெட்டி உடைக்கபட்டு இருந்ததை கண்டு முன்பக்க கதவினை உடைத்து சென்று பார்த்துள்ளார்.
அங்கே, பவுலின் மேரி மற்றும் அவரது தாய் தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர் . தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் சோதனை செய்த போது தாய்-மகள் இருவரும் தலையில் கம்பால் அடித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
மேலும் கழுத்தில் அணிந்து இருந்த தாலி செயின் மற்றும் வீட்டில் இருந்த நகைகளும் மாயமாகி இருந்ன. இந்த கொலை நகைக்காக நடந்ததா அல்லது வழக்கினை திசை திருப்ப நகை கொள்ளையடிக்க பட்டதா என்ற சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்நிலையில், சம்பவ நடத்த இடத்திற்கு உடனடியாக வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத், கொலை குறித்து விசாரணை மேற்கொண்டார். கை ரேகை நிபுணர்கள் வரவழைக்கபட்டு, மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளியை தேடி வருகின்றனர்.
Must Read : பிறந்து 40 நாட்களே ஆன பச்சிளங்குழந்தையை பக்கெட் நீரில் மூழ்கடித்து கொன்ற கொடூரம் - தாயும் மகளும் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம்
அவர்கள் இருவரும் முன்தினமே கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தாய் மற்றும் மகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
உங்கள் நகரத்திலிருந்து(Kanniyakumari)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.