ஹோம் /நியூஸ் /கன்னியாகுமரி /

10 ஆயிரம் கொடுத்தால் 3 மாதத்தில் ரூ.50,000... மோசடியில் ஈடுபட்ட திமுக பிரமுகர் கைது..

10 ஆயிரம் கொடுத்தால் 3 மாதத்தில் ரூ.50,000... மோசடியில் ஈடுபட்ட திமுக பிரமுகர் கைது..

சோதனையில் ஈடுபட்ட போலீசார்

சோதனையில் ஈடுபட்ட போலீசார்

மூன்று மாதத்தில் 5 மடங்கு பணம் வழங்குவதாக பண வசூலில் ஈடுபட்ட திமுக பிரமுகர் உட்பட 6 பேர் பிடிபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Kanniyakumari (Kanyakumari), India

  கன்னியாகுமரியில் 10 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் 3 மாதத்தில் 50 ஆயிரம் ரூபாய் தருவதாக கூறி மோசடி பண வசூலில் கும்பல் ஒன்று ஈடுபட்டுள்ளது.போலீசாரின் திடீர் சோதனையில் பல லட்ச  ரூபாய் ரொக்க பணத்துடன் அந்த கும்பல் சிக்கியுள்ளது.

  சுற்றுலா தலமான கன்னியாகுமரி அருகே  வடக்கு குண்டல் பகுதியில் செயல்பட்டு வரும்  தனியார் தங்கும் விடுதியில் நேற்று முன்தினம் 6 பேர்  கொண்ட கும்பல் ஆளுங்கட்சி கொடி கட்டிய காரில் வந்திறங்கி அறை எடுத்து தங்கி உள்ளனர். அதன் பிறகு அவர்கள் தங்கியிருந்த அறைக்கு பலரும் வந்து சென்ற நிலையில் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டுள்ளது.

  தங்கள் ஊரில் உள்ள தனியார் விடுதிக்கு முன் எப்போதும் இல்லாத அளவு வாகனங்களும் ஆட்களும் வந்து செல்வதை பார்த்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து  கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் அங்கு வந்த கன்னியாகுமரி போலீசார்  மதுரை மாவட்டம் திருமங்கலம்  பேரையூர் பகுதியை சார்ந்த திமுக பிரமுகர் சுந்தர பாண்டியன் மற்றும்  அவருடன் இருந்த 5 நபர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

  Read More : வயிற்று வலிக்கு சிகிச்சை பெற்று வந்த 14 வயது சிறுமி பலி.. தவறான சிகிச்சை காரணமா?

   இதில் சுந்தரபாண்டியன் தன்னிடம் 10 ஆயிரம் கொடுத்தால் 3 மாதத்தில் 5 மடங்காக 50 ஆயிரம் கொடுப்போம் என தனக்கு  வேண்டியவர்களிடமும், இதற்காகவே உள்ள புரோக்கர்கள் மூலம் தகவல் கொடுத்து கன்னியாகுமரிக்கு வரவழைத்து உள்ளார். இவர்களின் வாக்குறுதிகளை  நம்பி 25க்கும் மேற்பட்ட நபர்கள் இவர்களிடம் பணத்தை கொடுத்ததாக தெரிகிறது.

  மேலும் விசாரணையின் போது விடுதியில் இருந்து பை ஒன்றை தூக்கி வெளியே வீசியுள்ளனர். இதனால் போலீசார் தொடர்ந்து சோதனையிட்ட போது,இவர்கள் தங்கி இருந்த அறையில் பணம் வாங்கும் போது கொடுக்கப்படும் ஆவணங்கள், 10 க்கும் மேற்பட்ட செல்போன்கள், லேப்டாப், உள்பட ,ரொக்க பணமாக பல லட்சத்தையும் கைப்பற்றியுள்ளனர். அதேப்போன்று திமுக கட்சி கொடி கட்டிய மூன்று வாகனங்களையும் பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து இதுகுறித்து கன்னியாகுமரி டிஎஸ்பி ராஜா தலைமையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  போலீசாரிடம் சிக்கிய 35 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மூன்று மாதத்தில் 5 மடங்கு பணம் வழங்குவதாக பண வசூலில் ஈடுபட்ட திமுக பிரமுகர் உட்பட 6 பேர் பிடிபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  செய்தியாளர் : ஐ.சரவணன்

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Kanniyakumari