Home /News /kanniyakumari /

கிருஷ்ண ஜெயந்தி விழாவில் தூய்மை பணியாளர்களுக்கு கௌரவம்

கிருஷ்ண ஜெயந்தி விழாவில் தூய்மை பணியாளர்களுக்கு கௌரவம்

கன்னியாகுமரி

கன்னியாகுமரி

Kanniyakumari | கிருஷ்ண ஜெயந்தி திருவிழாவில் பேரூட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களை கௌரவித்து மீனச்சல் ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோவில் நிர்வாகம் நல திட்டங்களை வழங்கியது. இந்த உதவிகளை மலையாள திரையுலகில் இருக்கும் பிரபல இயக்குனர் ராஜசேனன் பணியாளர்களுக்கு வழங்கினார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kanniyakumari (Kanyakumari), India
குமரி மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு வாய்ந்த பிரசித்திபெற்ற மீனச்சல் ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோவிலில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி ஐந்து நாட்கள் திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகளால் முடங்கிய திருவிழா இவ்வாண்டு பல்வேறு பூஜைகள், கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக கிருஷ்ண ஜெயந்தி விழா ஐந்து நாட்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் களியக்காவிளை தேர்வு நிலை பேரூராட்சிக்குட்பட்ட இந்த கோவிலில் கடந்த கொரோனா காலங்களில் முன் களபணியாளர்களாக மக்களுக்காக பணியாற்றிய பேரூராட்சியில் உள்ள 25 தூய்மை பணியாளர்களை கோவில் நிர்வாகம் சார்பில் கௌரவிக்க முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி, அவர்களை விழா மேடையில் வரவழைத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் ராஜசேனன் தூய்மை பணியாளர்களை கவுரவித்து பல நல உதவிகளை வழங்கினார்.

Also see...மதுரையில் பிரபல ஓட்டலில் தீ விபத்து..பல லட்சம் பொருட்கள் சேதம்

முன்னதாக மேடையில் பேசிய இயக்குனர் ராஜசேனன் நவீன உலகில் பகவத் கீதையின் மகத்துவம் புதிய தலைமுறைக்கு மிகவும் முக்கியம் என்பதும் கிருஷ்ண பகவானை பற்றியும்  மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய அவர் ' நாராயணீயம் " என்ற ஆத்மீய நூலில் இடம் பெற்றுள்ள பாடல் வரிகளை பாடினார். ஐந்து நாட்கள் நடைபெறும் கிருஷ்ண ஜெயந்தி திருவிழா இன்றுடன் நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Kanniyakumari

அடுத்த செய்தி