கிருஷ்ணகிரியை சேர்ந்த இன்ஜினியர் ஒருவர் கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியில் உள்ள ஃபேஸ்புக் காதலியின் வீட்டை கூகுள் லொகேஷன் மூலம் கண்டுபிடித்து சென்று பெண் கேட்டு ரகளையில் ஈடுபட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அடுத்த பேயன்குழி பகுதியை சேர்ந்தவர் 22-வயதான ஷாலியா. பட்டப்படிப்பு முடித்த இவருக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம் ரெட்டியார் தோட்டம் பகுதியை சேர்ந்த 25-வயதான பிடெக் இன்ஜினியரன நிஷோர் என்பவருக்கும் ஃபேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பழகி வந்த இவர்கள் செல்போன் எண்களை பகிர்ந்து கொண்டு வாட்ஸ்அப் சேட்டிங் மற்றும் வீடியோ கால் மூலம் நட்பை வளர்த்தனர். மேலும் ஆன்லைன் ஷாப்பிங் மூலம் பரிசு பொருட்களை பகிர்ந்து கொண்டு பண உதவிகளையும் செய்து வந்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் நிஷோர், ஷாலியாவை காதலிக்க ஆரம்பித்தார். தனது விருப்பத்தையும் ஷாலியாவிடம் சொல்ல அவரோ பெற்றோர் சம்மதிக்க மாட்டார்கள் என கூறி காதலுக்கு மறுப்பு தெரிவித்ததோடு நண்பராகவே தொடரலாம் என கூறியுள்ளார்.
இருப்பினும் நிஷோர், ஷாலியாவை ஒருதலை பட்சமாக தொடர்ந்து காதலித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் ஷாலியாவை தொடர்பு கொண்டு, “வீட்டிற்கு நேரடியாக வந்து பெண் கேட்கிறேன்” என கூறி வீட்டு முகவரியை கேட்டுள்ளார். இதனையடுத்து ஷாலியா நிஷோர் உடன் பேசுவதையும் நிறுத்தியுள்ளார். இதனால் விரக்தியடைந்த நிஷோர் கிருஷ்ணகிரியில் இருந்து புறப்பட்டு நாகர்கோவில் வந்துள்ளார். அங்கிருந்து பெண்ணின் ஊரை கூகுள் லொகேஷன் மூலம் கண்டறிந்து பேயன்குழி பகுதிக்கு சென்று ஷாலியா பெயரை சொல்லி வீட்டை கண்டு பிடித்துள்ளார்.
புதன்கிழமை மாலை ஷாலியா வீட்டிற்கு சென்ற நிஷோர் அவரது பெற்றோரிடம் காதலிப்பதாக கூறி பெண் கேட்டுள்ளார். இதற்கு ஷாலியா தாயார் எதிர்ப்பு தெரிவிக்கவே அவரை நிஷோர் சரமாரியாக தாக்கியுள்ளார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை சுற்றி வளைத்து பிடித்து இரணியல் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனைதொடர்ந்து, நிஷோர் தன்னை காதலிக்க வற்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்ததோடு, தடுக்க வந்த தனது தாயையும் தாக்கியதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க கேட்டும் இரணியல் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் நிஷோர் மீது பெண் வன் கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட 7-பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Kanniyakumari, Love issue, Man arrested