Home /News /kanniyakumari /

ஆண் நண்பர்களுடன் மது, போதை என ஜாலியாக இருந்த காதலி.. மண்டையை உடைத்து மருத்துவமனைக்கு அனுப்பிய காதலன்

ஆண் நண்பர்களுடன் மது, போதை என ஜாலியாக இருந்த காதலி.. மண்டையை உடைத்து மருத்துவமனைக்கு அனுப்பிய காதலன்

கிப்டி

கிப்டி

சம்பவம் நடந்த வீட்டை போலீசார் ஆய்வு செய்த போது அங்கு, புகைக்கப்பட்ட சிகரெட் துண்டுகள், ஆங்காங்கே வீசப்பட்டு கிடந்த ஆடைகள், ஆணுறைகளை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Kanniyakumari, India
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் சக தோழிகளை மது விருந்துக்கு அழைத்து போதையில் ஆண் நண்பர்களுக்கு கிப்ட் ஆக்கிய "கிப்டி" என்ற ஜாபியா ஜாஸ்மினை கையும் களவுமாக பிடித்த முன்னாள் காதலன், கிப்டியின் மண்டையை உடைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் கல்லுக்கூட்டம் பகுதியை சேர்ந்த 20 வயதான ‘கிப்டி’ என்ற ஜாபியா ஜாஸ்மின் கருங்கல் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ 3 ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது பள்ளி தோழனான அஜின் என்பவரை கடந்த 6-வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.

பைக் பிரியரான இவர் காதலனுடன் பைக்கில் டிரிப் அடித்து  சுற்றி வந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரங்களில் காதலனுக்கு தெரியாமல் தான் வசிக்கும் பங்களா வீட்டிற்கு வேறு சில ஆண் நண்பர்களையும் தோழிகளையும் அழைத்து மது விருந்து கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி தோழிகளையும் மதுவுக்கு அடிமையாக்கி வீழ்த்தி ஆண் நண்பர்களுக்கு விருந்தாக்கி வந்துள்ளார்.

இதை அறிந்த காதலன் அஜின் கிப்டியை கண்டித்துள்ளார். அதற்கு, “வாழ்க்கையை என்ஜாய் பண்ணி வாழுடா.. என்னை நம்பாதே.. என்னைப்போல் நீயும் என்ஜாய் பண்ணு” என அட்வைஸ் செய்து அஜினின் காதலை பிரேக்அப் செய்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு, கிப்டி தனது ஆண் நண்பர்கள் மற்றும் தோழிகளுடன் தனது பெரியப்பாவின் பங்களா வீட்டில் மது விருந்துடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இதனை அறிந்த அஜின் அந்த வீட்டிற்கு சென்று, பங்களா வீட்டின் அருகே உள்ள மரத்தின் மீது ஏறி மாடிக்கு சென்று பார்த்துள்ளார்.
அப்போது கிப்டி மற்றும் அவரது தோழிகள் மற்றும் ஆண் நண்பர்கள் மது போதையில் அரைகுறை ஆடையில் உல்லாசமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த அஜின் அருகே கிடந்த மரக்கட்டையை எடுத்து ஆவேசமாக அறைக்குள் சென்று அரைகுறை ஆடையில் இருந்த கிப்டியின் நண்பர்களை விரட்டியடித்துள்ளார். மேலும் கிப்டியின் தலையில் கட்டையால் ஓங்கி அடித்து மண்டையை உடைத்துள்ளார். அப்போது கிப்டியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதை கண்ட அஜின், அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கிப்டி, இந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். புகார் அளித்ததை அடுத்து அஜின்-ஐ காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தொடர்ந்து, சம்பவம் நடந்த வீட்டை போலீசார் ஆய்வு செய்த போது அங்கு, புகைக்கப்பட்ட சிகரெட் துண்டுகள், ஆங்காங்கே வீசப்பட்டு கிடந்த ஆடைகள், ஆணுறைகளை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து, கிப்டியின் ஆண் நண்பர்கள் குறித்தும் கிப்டியால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவிகள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அஜின் தாயார் கிப்டியால் பாதிக்கப்பட்ட பெண்கள் பற்றிய ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் தனது மகன் மீது தீவிர நடவடிக்கை எடுத்தால் அந்த ஆதாரங்களை வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார்.

 
Published by:Ramprasath H
First published:

Tags: Kanniyakumari

அடுத்த செய்தி