ஹோம் /நியூஸ் /கன்னியாகுமரி /

மகளை காணவில்லை என புகார் கொடுத்த தந்தை.. மணக்கோலத்தில் காவல்நிலையத்தில் தஞ்சமடைந்த இளம்பெண்..

மகளை காணவில்லை என புகார் கொடுத்த தந்தை.. மணக்கோலத்தில் காவல்நிலையத்தில் தஞ்சமடைந்த இளம்பெண்..

காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடி

காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடி

Kanyakumari News| இருவரும் வெறு வகுப்பை சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் தந்தை இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kanniyakumari, India

அருமனையில் 2 நாட்களாக தேடப்பட்டு வந்த பெண் திருமண கோலத்தில் காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த சம்பவம் அப்பகுதியில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையை சேர்ந்தவர் கண்ணன்.  இவர் தனது மகள் விஷ்ணு ப்ரியாவை காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.  அந்தப் புகாரில் தனது மகள் பொற்றவிளை புதுக்கடை அம்சி பகுதியை சேர்ந்த கண்ணனுடைய  உறவினர் வீட்டில் மகள்  இருக்க வாய்ப்புள்ளதாகவும் என் மகளை மீட்டு தர வேண்டும் என்று அதில் குறிப்பிட்டு இருந்தார்.இந்தப்புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் மாயமானதாக கூறப்பட்ட விஷ்ணு பிரியா தன் காதலன் பிரசாந்த் என்பவருடன் திருமண கோலத்தில் காவல் நிலையத்தில்  தஞ்சம் அடைந்தார்.

விஷ்ணு பிரியா பிரசாந்த் என்பவரை கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு விஷ்ணு பிரியாவின் தந்தை மட்டும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் அவரது தாய் மற்றும் அவரது சகோதர் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனால் காதலன் பிராசந்த் வீட்டினரின் சம்மத்துடன் அவரது தந்தையை எதிர்த்து திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து அருமனையில் உள்ள அவரது உறவினர்கள் மற்றும் விஷ்ணு பிரியாவின் தாய் சம்மதத்துடன் ஸ்ரீ கிருஷ்ணா பரமாத்மா திருக்கோவிலில் திருமணம் செய்துள்ளார்.

இந்த நிலையில் சாதி மாறி திருமணம் செய்துகொண்டதால் தன் தந்தை கொலை மிரட்டல் விடுப்பதாக குறி காவல்நிலையத்தில் விஷ்ணு பிரியா மற்றும் பிரசாந்த் தஞ்சம் புகுந்துள்ளனர். இதனையடுத்து விஷ்ணுபிரியாவின் தந்தை காவல்நிலையம் சென்றவுடன் காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தியதை அடுத்து விஷ்ணுபிரியாவின் தந்தை கண்ணன் அமைதியாக சென்றுவிட்டார்.

First published:

Tags: Kanniyakumari, Local News