ஹோம் /நியூஸ் /கன்னியாகுமரி /

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாஸ்டர் லிஸ்ட் தயார்... நடவடிக்கை தீவிரம் - எஸ்பி அதிரடி தகவல்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாஸ்டர் லிஸ்ட் தயார்... நடவடிக்கை தீவிரம் - எஸ்பி அதிரடி தகவல்!

போலீஸ் எஸ்பி ஹரிகிரண் பிரசாத்

போலீஸ் எஸ்பி ஹரிகிரண் பிரசாத்

Kanniyakumari News : கன்னியாகுமரி மாவட்ட தமிழக - கேரளா எல்லை சோதனைச்சாவடிகளில் கேரளாவிலிருந்து கொண்டுவரபட்டும் மருத்துவ கழிவுகளை சோதனை செய்வதில் நிபுணர்கள் பற்றாக்குறை என மாவட்ட எஸ்பி ஹரிகிரண் பிரசாத் பேட்டி.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Kanniyakumari, India

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் தேதி பணியிலிருந்த காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் பயங்கரவாதிகளால் சுட்டுகொல்லப்பட்டார். இதையடுத்து எஸ்எஸ்ஐ வில்சன் கொல்லப்பட்டு 3ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி களியக்காவிளை காவல்நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த அவரது திருவுருப்படத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத் கலந்துகொண்டு எஸ்எஸ்ஐ வில்சனின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து தக்கலை உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் கணேஷ், ஆய்வாளர் காளியப்பன் மற்றும் காவல்துறையினரும் எஸ்எஸ்ஐ வில்சனின் குடும்பத்தினரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து மார்த்தாண்டத்திலுள்ள எஸ்எஸ்ஐ வில்சனின் வீட்டிற்கு சென்ற எஸ்பி ஹரிகிரண் பிரசாத் அங்கு வைக்கப்பட்டிருந்த எஸ்எஸ்ஐ வில்சனின் திருவுருவபடத்திற்கும் மரியாதை செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் எஸ்பி ஹரிகிரண் பிரசாத் கூறுகையில், “எஸ்எஸ்ஐ வில்சனின் உயிர் தியாகம் எங்களை புதிய உத்வேகத்திற்கு அழைத்து செல்கிறது.  டிஜிபி உத்தரவின் அடிப்படையில் குமரி மாவட்ட காவல்நிலையங்களில் குற்றச்செயல்களில் பறிமுதல் செய்யப்பட்டு குவிந்துவரும் வாகனங்களை அகற்றும் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மாவட்டத்தில் மாஸ்டர் லிஸ்ட் தயார் செய்து  கஞ்சா வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு கஞ்சா விற்பனை செய்யப்படும்  இடங்களிலேயே தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக - கேரளா எல்லையோர சோதனை சாவடிகளில் அதிகளவில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனினும் கேரளாவிலிருந்து கொண்டு வரப்படும் மருத்துவ கழிவுகளை சோதனை செய்வதில் தேவையான நிபுணர்கள் பற்றாக்குறை உள்ளது. அனைத்து சோதனை சாவடிகளிலும் தற்போது கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. எல்லை சோதனை சாவடிகளில் இரவு நேரப்பணியிலிருப்பவர்களுக்கு தேவையான ஆயுதங்கள் வழக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் மாவட்டத்திலுள்ள பல்வேறு காவல்நிலையங்களில் காவல்துறையினர் பற்றாக்குறை இருந்தது. தற்போது அனைத்து காவல்நிலையங்களிலும் போதுமான காவல்துறையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். குளச்சல், தக்கலை, காவல் உட்கோட்டத்திற்கும் சிறப்பு அதிவிரைவுப்படையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க : என்எல்சி நிறுவனத்துக்கு ஒரு பிடி மண்ணைக்கூட தரமாட்டோம்... அன்புமணி ராமதாஸ் திட்டவட்டம்!

குமரி மாவட்டத்தில் அதிகமான மக்கள் வெளிநாடுகளில் பணியாற்றி வரும் நிலையில் பொதுமக்கள் வீட்டை பூட்டிவிட்டு வெளியே செல்லும்போது அருகில் உள்ள காவல்நிலையத்தில் தகவல் அளித்துவிட்டு சென்றால் காவல்துறை கண்காணிப்பில் அவர்களது வீடுகள் இருக்கும். பொதுமக்கள் ஒத்துழைத்தால் குற்றச்சம்பவங்கள் குறையும்” என அவர் தெரிவித்தார்.

First published:

Tags: Kanniyakumari, Local News