Home /News /kanniyakumari /

கன்னியாகுமரியில் அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கிய வாலிபர்... சிஐடியு தொழிற்சங்கத்தினர் போராட்டம்

கன்னியாகுமரியில் அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கிய வாலிபர்... சிஐடியு தொழிற்சங்கத்தினர் போராட்டம்

சிஐடியூ போராட்டம்

சிஐடியூ போராட்டம்

kanniyakumari | குமரி மாவட்ட அரசு பேருந்து ஓட்டுனரை தாறு மாறாக தாக்கிய  வாலிபர், அரசு பேருந்து ஓட்டுநர் மீது பொய் வழக்கை பதிவு செய்த போலீசார். CCTV காட்சிகள் உடன் நீதி கேட்டு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kanniyakumari (Kanyakumari), India
குமரி மாவட்டம் , மார்தாண்டத்திலிருந்து- வள்ளவிளை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தை, அவ்வழியாக சென்ற இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் கடக்க முயன்றுள்ளார். அப்போது,  இருசக்கர வாகன ஓட்டியின் கவன குறைவால் பேருந்து மீது வாகனம் மோதியது.  இந்த நிலையில் இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் பேருந்தை வழிமறித்து, ஒட்டுனர் யேசுதாஸ் உடன்  வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில் அந்த நபர் , அரசு பேருந்தின் ஓட்டுனரை பலமாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த ஓட்டுனர் யேசுதாஸ் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். ஆனால்  மார்த்தாண்டம் போலீசார் தாக்குதலுக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அரசு பேருந்து ஓட்டுநர் மீது பொய் வழக்கை பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.




இதை எதிர்த்து சிஐடியூ தொழிற்சங்க அரசு போக்குவரத்து  தொழிலாளர்கள் படந்தாலுமூடு அரசு போக்குவரத்து கழகம் முன்பு நீதி கேட்டு போராட்டம் நடத்தினர். தாக்குதல் நடத்தியவர் மீது   நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு போராட்டத்தின் போது கோரிக்கை விடுத்துள்ளனர்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: CCTV, CITU, Crime News, Kanniyakumari

அடுத்த செய்தி