ஹோம் /நியூஸ் /கன்னியாகுமரி /

சும்மாவே இந்த பஸ்ல உட்கார முடியாது.. மழை வந்தா கேட்கவே வேணாம் - குமுறும் குமரி மக்கள்

சும்மாவே இந்த பஸ்ல உட்கார முடியாது.. மழை வந்தா கேட்கவே வேணாம் - குமுறும் குமரி மக்கள்

பேருந்தில் பெய்யும் மழை

பேருந்தில் பெய்யும் மழை

Kanniyakumari | மழையின் போது பயணிகள்  நின்று கொண்டும் , ஒட்டுனர் மழையில் நனைந்தபடி ஓட்டும் நவீன பேருந்து குமரியில் அறிமுகம்  என சமூக வலைதலைகளில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kanniyakumari, India

குமரி மாவட்டத்தின் மேற்கு மலையோர பகுதிகள் என்பது மற்ற பகுதிகளை விட அதிகமாக மழை பெய்யும் பகுதி. அது போல இந்த பகுதிகளில் 22- க்கு மேற்பட்ட மலை கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்தும் வருகின்றனர். இவர்களுக்கு என ஒரு சில பேருந்து வசதிகள் மட்டுமே ஏற்படுத்தப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் பகுதியில் திருவட்டார் பணிமனையில் இருந்து 89 ஜே என்ற பேருந்து ஒரு நாளுக்கு ஆறு முறை மலையோர கிராமங்களுக்கு வந்து செல்கிறது.

இங்கு சாலை வசதியும் சீராக இல்லாததால் பேருந்தில் இருக்கையில் இருந்து வருவதே மிகவும் கடினமாக ஒரு காரியம். அதே நேரத்தில் மழை என்றால் பயணிகள் நின்றபடி  அதுபோல ஓட்டுனரும் நனைந்தபடியே பேருந்தை ஒட்டி வர வேண்டும் என்பதும் மற்றொரு துரதிஷ்டம். இது குறித்து பலமுறை  இப்பகுதி பொதுமக்கள் புகார் அளித்தும் மலையோர கிராம சாலை குறித்தும் மனுக்கள் உட்பட புகார்கள் அளித்தும் இதுவரையிலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அதுபோல மழை நேரங்களில் பயணிகள் உட்பட பேருந்து ஓட்டுநரும் கஷ்டப்படும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது என பல மனுக்கள் அளித்தும் இதுவரையிலும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மழை நேரங்களில் வேலை செய்யாத வைப்பர்களுக்கு பதிலாக தங்களிடம் இருக்கும் பேப்பர்களை வைத்து கண்ணாடியை துடைக்கும் பணி என்பது இப்பகுதி மக்களுக்கு தினசரி வேலைகளில் ஒன்று.

Also see... சென்னை புறநகர் பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழை...!

இது இப்போது மட்டுமல்லாமல் பல காலங்களாகவும் தொடர்கிறது . இந்த நிலையில் பேருந்தில் பயணிகள் உட்காராமல் மழையின் போது நின்று வரும் வீடியோ காட்சிகள் உட்பட பல காட்சிகள் சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்டதுடன்  மிகவும் வைரல் ஆகியும் வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Bus, Heavy rain, Kanniyakumari