ஹோம் /நியூஸ் /கன்னியாகுமரி /

ஆன்லைனில் செல்போனை ஆர்டர் செய்து டெலிவரி பாயை ஏமாற்றிய வாலிபர்கள்..! களியக்காவிளையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

ஆன்லைனில் செல்போனை ஆர்டர் செய்து டெலிவரி பாயை ஏமாற்றிய வாலிபர்கள்..! களியக்காவிளையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

கைதானவர்கள்

கைதானவர்கள்

Online Order Cheating : ஆன்லைன் டெலிவரி ஊழியரிடம் நூதன முறையில் திருடிய இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kanniyakumari, India

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே மீனச்சல் பகுதியை சேர்ந்த ஒருவரது முகவரியுடன் ஆன்லைனில் விலை உயர்ந்த 2 செல்போன்கள் மற்றும் கேமரா ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. இதனை டெலிவரி கொடுப்பதற்காக மார்த்தாண்டத்தை சேர்ந்த கொரியர் நிறுவன ஊழியர் செல்போனில் தொடர்பு கொண்டபோது ஒரு வாலிபர் எடுத்து களியக்காவிளை பகுதிக்கு பொருட்களை கொண்டு வரச்சொல்லி கூறியுள்ளார்.

இதனையடுத்து டெலிவரிபாய் ஆர்டர் செய்த பொருட்களுடன் சென்ற நிலையில் அங்கு 2 இருசக்கர வாகனங்களில் காத்திருந்த வாலிபர்களில் ஒருவன் டெலிவரி பாயிடம் பேச்சுக்கொடுக்க மற்றொரு வாலிபர் கண்ணிமைக்கும் நேரத்தில் ஆர்டர் செய்திருந்த விலை உயர்ந்த செல்போன்கள் மற்றும் கேமராவை பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றுள்ளார். மேலும், அவர் சென்ற உடனே மற்றொரு வாலிபரும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த டெலிவரி பாய் தனது நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்துவிட்டு களியக்காவிளை போலீசில் புகாரளித்தார். அதன்பேரில் விசாரணை நடத்தி வந்த களியக்காவிளை போலீசார் அந்த மோசடியில் ஈடுபட்ட வாலிபர்கள் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த அருவிக்கரை பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் நூதன மோசடியில் ஈடுபட்ட அகில் கிருஷ்ணா மற்றும் அமித் குமார் ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் மோசடி செய்து எடுத்து சென்ற விலை உயர்ந்த 2 போன்களை விற்பனை செய்தது தெரியவந்தது.  இதனையடுத்து அவர்களிடம் இருந்து ஒன்றரை  லட்சம் ரூபாய் பணம் மற்றும் கேமராவை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

First published:

Tags: Crime News, Kanniyakumari, Local News