ஹோம் /நியூஸ் /கன்னியாகுமரி /

காதலியை பார்க்க பர்தாவுடன் கல்லூரிக்குள் நுழைந்த காதல் ரோமியோ.. வார்னிங் கொடுத்து அனுப்பிய போலீஸார்

காதலியை பார்க்க பர்தாவுடன் கல்லூரிக்குள் நுழைந்த காதல் ரோமியோ.. வார்னிங் கொடுத்து அனுப்பிய போலீஸார்

மாதிரி படம்

மாதிரி படம்

சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் பர்தாவுடன் கல்லூரியில் சுற்றி திரிந்த இளைஞரை பிடித்து காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kanniyakumari, India

காதலியை நேரில் சந்தித்து மனம் விட்டு பேச பெண் வேடமணிந்து பர்தாவுடன் கல்லூரிக்குள் நுழைந்த இளைஞரை காவலாளியிடம் சிக்கிய சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே ஸ்ரீ மூகாம்பிகா என்ற தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் ஏராளமான உள் மற்றும் வெளி நோயாளியாகள் வந்து செல்வதால் மருத்துவமனையின் பாதுகாப்பு பணியில்  காவலாளிகளும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் பணியில் இருந்த போது பர்தா அணிந்த நிலையில் சந்தேகத்திற்கு இடமாக ஒருவர் சுற்றி வருவதை பார்த்தனர். சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில்  சுற்றி திரிந்ததால் அவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் எந்தவித பதிலும் அளிக்காததால், பர்தாவை விலக்கி பார்த்தபோது வாலிபர் ஒருவர் தான் பர்தா அணிந்து பெண் போல வந்திருப்பது தெரியவந்தது.

மேலும் இதுகுறித்து மருத்துவக் கல்லூரி சார்பில் குலசேகரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து அந்த வாலிபரை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். பின்னர் அந்த வாலிபரிடம் காவல் நிலையத்தில் வைத்து நடத்திய தீவிர விசாரணையில்  வாலிபர், கேரள மாநிலத்தை சேர்ந்தவர் என்றும், கோழிக்கோடு பகுதியில் மருத்துவ மேற்படிப்பு படித்து வருவதாகவும், தன் காதலியிடம் தினமும் போனில் பேசி வருவதாகவும், அவரை நேரில் பார்க்கவும் மனம் விட்டு பேசவும், கல்லூரிக்குள் நேரடியாக சென்றால் முடியாது என்பதால் கேரளாவில் இருந்து வரும் போதே கடைக்கு சென்று பர்தா வாங்கி வந்ததாகவும் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து வாலிபரின் பெற்றோருக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். அவர்கள் உடனடியாக குலசேகரம் காவல் நிலையம் வந்தனர். தங்கள் மகனின் செயல் தவறு என்று மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து விட்டு வாலிபரை அழைத்து சென்றனர். காதலியை சந்திக்க வாலிபர் பர்தா அணிந்து பெண் போல் மருத்துவக் கல்லூரிக்கு வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

First published:

Tags: Kanniyakumari, Local News, Love