ஹோம் /நியூஸ் /கன்னியாகுமரி /

மாத்திரைதான் ஃபர்ஸ்ட்.. 10 தடவை கொலை செய்ய ட்ரை பண்ணேன் - சலனமே இல்லாமல் போலீசிடம் சதியை விவரித்த கிரீஷ்மா

மாத்திரைதான் ஃபர்ஸ்ட்.. 10 தடவை கொலை செய்ய ட்ரை பண்ணேன் - சலனமே இல்லாமல் போலீசிடம் சதியை விவரித்த கிரீஷ்மா

கேரள இளைஞர் கொலை வழக்கு

கேரள இளைஞர் கொலை வழக்கு

Crime News: ஷாரோனை எங்கெங்கு அழைத்து சென்று குளிர்பானத்தில் மாத்திரைகளை கலந்து கொடுத்து கொலை முயற்சியில் ஈடுபட்டார் என போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Kanniyakumari (Kanyakumari) | Kerala

கன்னியாகுமரியில் 10 முறை மாத்திரைகளை கொடுத்து கொலை செய்ய முயற்சித்துள்ளதாக கல்லூரி மாணவி கிரீஷ்மா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

கேரள மாநிலம் பாறைசாலையை சேர்ந்த ஷாரோன் ராஜ்-க்கு குமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியை சேர்ந்த கிரீஷ்மா மீது காதல் ஏற்பட்டுள்ளது.  ஷாரோன் தனது காதலை கிரிஷ்மாவுடன் கூற அவரும் சம்மதிக்க இருவரும் காதலர்களாக வலம் வந்துள்ளனர். கிரீஷ்மா குடும்பத்துக்கு ஜாதகம், ஜோதிடத்தில் அதிக நம்பிக்கை. அந்தப்பெண்ணின் ஜாதகப்படி முதல் கணவன் உயிரிழந்துவிடுவார் இரண்டாவது கணவருடன் தான் அந்தப்பெண் வாழமுடியும் என ஜோசியர் ஒருவர் கூற அதனை நம்பியுள்ளனர்.

கிரிஷ்மாவுக்கு பெரிய இடத்தில் வரன் அமைந்ததால் காதலன் ஷாரோனை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர். கல்யாணம் நாடகத்தை அரங்கேற்றிய கிரீஷ்மா குடும்பம் ஷாரோனை கோயிலுக்கு வரவழைத்து இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். காதல் கணவனை வீட்டுக்கு அழைத்து சென்று விஷம் கலந்த கசாயத்தையும், குளிர்பானத்தையும் கொடுத்து ஷாரோனை கொலை செய்துள்ளனர்.

இந்த வழக்கை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வரும் நிலையில், கேரள குற்றப்பிரிவு போலீசார், இன்று கிரீஷ்மாவை, ஷாரோன் படித்த கன்னியாகுமரி மருத்துவ மிஷனுக்கும், கிரீஷ்மா படித்த திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக்கல்லூரிக்கும் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க | பச்சிளம் குழந்தைக்கு ரூ.3 லட்சம் பேரம்.. சேலத்தில் சிக்கிய இடைத்தரகர்கள் - நடந்தது என்ன?

விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்: 

ஷாரோனுடன் உல்லாசமாக இருப்பது போன்று நடித்து கொலை சதியை அரங்கேற்ற முயற்சித்து குறித்து காவல்துறையிடம் விரிவாக கூறியுள்ளார் கிரீஷ்மா. கடந்த 2-மாதத்திற்கு முன் ரோன் படிக்கும் நெய்யூரில் உள்ள கன்னியாகுமரி மருத்துவ மிஷன் சி.எஸ்.ஐ மருத்துவமனைக்கு க்ரீஷ்மா சென்றுள்ளார். ஷாரோனை டாய்லெட்டுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருப்பது போல் முதல் முறையாக குளிர்பானத்தில் காய்ச்சலுக்கான மாத்திரைகளை அதிக அளவு கலந்து கொடுத்து கொலை செய்ய முயன்றுள்ளார்.  சாரோனுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத நிலையில் தொடர்ந்து 2-வது மாதத்தில் ஷாரோனின் கல்லூரி மற்றும் சொகுசு விடுதிகளுக்கும் அழைத்து சென்று பத்து முறை இதேப்போல் மாத்திரைகளை குளிர்பானத்தில் கலந்து கொடுத்து கொலை செய்ய முயற்சித்ததாக கூறி போலீசாரை அதிரவைத்துள்ளார்.

மேலும், இதற்கு தேவையான மாத்திரைகளை திருவிதாங்கோடு பகுதியில் உள்ள ஒரு மெடிக்கலில் வாங்கியுள்ளார். 10-முறையும் ஷாரோன் பாதிப்பின்றி தப்பியதால்,  அவரை தன் வீட்டிற்கு அழைத்து சென்று கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து கேரளா போலீசார், க்ரீஷ்மா சாரோனை எங்கெங்கு அழைத்து சென்று குளிர்பானத்தில் மாத்திரைகளை கலந்து கொடுத்து கொலை முயற்சியில் ஈடுபட்டாரோ அந்த இடங்களுக்கு அழைத்து சென்று அந்த இடங்களை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Published by:Anupriyam K
First published:

Tags: Crime News, Kanniyakumari, Murder