ஹோம் /நியூஸ் /கன்னியாகுமரி /

''10 முறை கொலை முயற்சி.. காய்ச்சல் மாத்திரையை கலந்தேன்''.. ஜூஸில் விஷம் கலந்த விவகாரத்தில் காதலி அதிர்ச்சி வாக்குமூலம்!

''10 முறை கொலை முயற்சி.. காய்ச்சல் மாத்திரையை கலந்தேன்''.. ஜூஸில் விஷம் கலந்த விவகாரத்தில் காதலி அதிர்ச்சி வாக்குமூலம்!

ஜூஸில் விஷம்

ஜூஸில் விஷம்

ஜோதிடத்தை நம்பி 2-வது கணவருடன் வாழ ஆசைப்பட்டு ஷாரோன் ராஜுவை 10 முறை கொலை செய்ய முயற்சித்ததாக தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kanniyakumari (Kanyakumari) | Kerala

    கன்னியாகுமரியில் காதலனுக்கு ஜூஸில் விஷம் கொடுத்து கொலை செய்த வழக்கில், ஏற்கனவே 10 முறை ஷாரோனை கொலை செய்ய முயற்சித்ததாக மாணவி கிரீஷ்மா அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.

    கேரளா மாநிலம் பாறசாலையைச் சேர்ந்த ஷாரோன் ராஜ் என்பவரும் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியில் வசிக்கும் கிரீஷ்மா என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.

    ஜோதிடத்தில் அதிக நம்பிக்கை கொண்ட கிரீஷ்மா குடும்பத்தினர், அவரது ஜாதகத்தின்படி முதல் கணவர் உயிரிழந்துவிடுவார் என்றும் 2-வது கணவருடன்தான் அவர் வாழமுடியும் எனவும் நம்பியுள்ளனர்.

    இதனையடுத்து குடும்பத்தினரின் உதவியுடன் ஷாரோன் ராஜை வரவழைத்த கிரீஷ்மா கோயிலில் திருமணம் செய்துள்ளார். தொடர்ந்து, விஷம் கலந்த கசாயத்தையும் குளிர்பானத்தையும் ஷாரோன் ராஜுக்கு கொடுத்து கொலை செய்துள்ளார்.

    இதையும் படிங்க | நிர்வாண மாடலிங்.. இன்ஸ்டாவில் பழக்கம்.. இளம்பெண்ணை ஆபாசமாக மார்ஃபிங் செய்த இயக்குநர்.!

    இந்த வழக்கில் தனிப்படை போலீசார் கிரீஷ்மாவை கல்லூரிக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே 10 முறை காய்ச்சல் மாத்திரைகள் அதிகளவில் கலந்து கொடுத்து கொலை செய்ய முயற்சித்ததாகவும், தற்போது 11வது முறையாக ஜூஸில் விஷம் கலந்து கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

    இதனை கேட்ட போலீசார், வழக்கை இன்னும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Published by:Anupriyam K
    First published:

    Tags: Crime News, Kanniyakumari, Murder case