ஹோம் /நியூஸ் /கன்னியாகுமரி /

ஜூஸில் விஷம் கலந்தது எப்படி? போலீஸாரிடம் நடித்துக்காட்டிய கேரள பெண்.. வீடியோ பதிவு செய்த போலீஸ்!

ஜூஸில் விஷம் கலந்தது எப்படி? போலீஸாரிடம் நடித்துக்காட்டிய கேரள பெண்.. வீடியோ பதிவு செய்த போலீஸ்!

விஷம் கலந்து கொலை

விஷம் கலந்து கொலை

நேற்றைய தினம் அதிகாரிகளால் சீல் வைக்கபட்ட கிரீஷ்மாவின் வீட்டின் பூட்டை உடைத்து புகுந்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்த தமிழக காவல்துறைக்கு கேரளா போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kanniyakumari, India

மாணவர் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கிரீஷ்மாவை கேரள குற்றப்பிரிவு போலீசார் கன்னியாகுமரியில் அவரது வீட்டிற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது விஷம் கொடுத்ததை அவர் போலீசாரிடம் நடித்து காட்டினார்.

கன்னியாகுமரியில் தமிழ்நாடு கேரள எல்லை பகுதியான பாறசாலையில், ஷாரோன் என்ற இளைஞருக்கு அவரது காதலியே குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த வழக்கில் குற்றவாளியான கிரீஷ்மாவை கேரள குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த விசாரணையின் போது குளிர்பானத்திலும் கஷாயத்திலும் விஷம் கலந்து கொடுத்து ஷாரோனை கொலை செய்ததாக கிரீஷ்மா போலீசாரின் விசாரணையில் ஒப்புக்கொண்டார். இந்த நிலையில் கேரள குற்றப்பிரிவு போலீசார் கிரீஷ்மாவை கன்னியாகுமரியில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் வாசிக்க: டி20 உலகக் கோப்பை பைனல்.. நாய்க்குட்டியிடம் ஆருடம் கேட்ட தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா! (news18.com)

அவரது வீட்டில் ஆய்வு நடத்தியபோது, எப்படி விஷம் கொடுத்தார் என போலீசாரிடம் நடித்து காட்டினார். அதனை காவல்துறையினர் படம் பிடித்தனர். மேலும் இருவரும் ஒன்றாக சுற்றித்திரிந்த பகுதிகளிலும் நேரடியாக சென்று ஆய்வு நடத்தினர்.

மேலும் நேற்றைய தினம் அதிகாரிகளால் சீல் வைக்கபட்ட கிரீஷ்மாவின் வீட்டின் பூட்டை உடைத்து புகுந்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்த தமிழக காவல்துறைக்கு கேரளா போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Published by:Siddharthan Ashokan
First published:

Tags: Crime News, Kanniyakumari