Home /News /kanniyakumari /

பள்ளிக் குழந்தைகளுடன் சென்ற ஆட்டோ தலைகுப்புற கவிழ்ந்து விபத்து… பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்

பள்ளிக் குழந்தைகளுடன் சென்ற ஆட்டோ தலைகுப்புற கவிழ்ந்து விபத்து… பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்

தலை குப்புற கவிழ்ந்த ஆட்டோ.

தலை குப்புற கவிழ்ந்த ஆட்டோ.

துரிதமாக செயல்பட்ட பொது மக்கள் சிறு சிறு காயங்களுடன் ஆட்டோவில் இருந்த 11 குழந்தைகளையும் மீட்டுஅருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kanniyakumari, India
கேரள மாநிலம் பாலக்காட்டில் 11 - பள்ளி குழந்தைகளுடன் சென்ற ஆட்டோ தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

கேரள மாநிலம் பாலக்காடு ,மேலாமுறி என்ற பகுதியில் வைத்து கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ தலைகுப்புற கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பயணித்த 11 பள்ளி குழந்தைகள் சிறு,சிறு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று காலையில் பாலக்காடு பகுதியில் உள்ள காணிக்கை மாதா பள்ளி குழந்தைகள் 11 பேரை ஏற்றி கொண்டு வந்த ஆட்டோ மேலாமுறி பகுதியில் வரும்போது,இருசக்கர வாகன ஓட்டி ஒருவரின் கையில் இருந்து நழுவிய வாகனம் சாலையில் விழுந்து உள்ளது.

ரயிலில் பெண் காவலரை கத்தியால் குத்திய நபர் கைது.. போலீஸ் என்றாலே வெறுப்பு என வாக்குமூலம்!

அப்போது அந்த இருசக்கர வாகனத்தில் ஆட்டோ மோதாமல் இருக்க ஆட்டோ ஓட்டுனர் ஆட்டோவை திடீரென பிரேக் போட்டு வளைத்துள்ளார்.

[video width="560" height="288" mp4="https://images.news18.com/tamil/uploads/2022/08/1822099_CON_VID-20220826-WA0380.mp4"][/video]

இதில் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையில் தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது.துரிதமாக செயல்பட்ட அப்பகுதி மக்கள் சிறு சிறு காயங்களுடன் ஆட்டோவில் இருந்த 11 குழந்தைகளையும் மீட்டுஅருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சென்னையில் 367 பள்ளிகளில் விளையாட்டு மைதானம் இல்லை: முதன்மைக் கல்வி அதிகாரி அறிக்கை

இது குறித்து பாலக்காடு போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.
Published by:Musthak
First published:

Tags: Accident, CCTV Footage

அடுத்த செய்தி