Home /News /kanniyakumari /

சபரிமலை மேற்கூரையில் கசிவு.. ஓணத்திற்கு முன்பு பணிகளை முடிக்க தீவிரம்

சபரிமலை மேற்கூரையில் கசிவு.. ஓணத்திற்கு முன்பு பணிகளை முடிக்க தீவிரம்

சபரிமலை மேற்கூரையில் ஏற்பட்ட கசிவை சரி செய்யும் பணியாளர்கள்

சபரிமலை மேற்கூரையில் ஏற்பட்ட கசிவை சரி செய்யும் பணியாளர்கள்

Kanniyakumari | செப்டம்பர் 7 ம் தேதிக்குள் சபரிமலை மூலவர்  கோவிலில் மேற்கூரையில் ஏற்பட்ட கசிவுக்கு தீர்வு காண வேண்டும் என கேரளா உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kanniyakumari, India
சபரிமலை மூலவர் கோவிலில் மேற்கூரையில் ஏற்பட்ட கசிவு தொடர்பான அனைத்து பணிகளையும் செப்டம்பர் 7ஆம் தேதிக்குள் முடிக்க திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சபரிமலை சிறப்பு ஆணையர் சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் நீதிபதிகள் அனில் கே நரேந்திரன் மற்றும் பிஜி அஜித் குமார் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

மேற்கூரையில் செப்பு தகிடுகளை இணைக்கப் பயன்படுத்தப்படும் ஆணிகள் வழியாக மழை நீர் கசிவதாக அறிக்கை தாக்கல் செய்திருந்தார். மழை பெய்தால் ஸ்ரீ கோவில் முன்பு உள்ள துவார பாலகர் சிற்பங்கள் மீது மழை நீர் வீழ்கிறது. மேற்கூரையின் மேற்புறத்தில் தேக்கு மரப்பலகை பொருத்தப்பட்டு, செப்பு முலாம் பூசப்பட்ட பின் தங்கத்தால் மூடப்பட்டிருக்கும். தங்க அடுக்கு வழியாக தண்ணீர் கசிவதை தடுக்க, ஒட்டப்பட்ட சிலிக்காவும் பல இடங்களில் கிளறப்பட்டது. மேலும்அவ்வழியாக வரும் தண்ணீரால்  மேற்கூரையில் பல்வேறு பகுதிகளில் பழுது ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

எனவே  தங்க அடுக்குகளை பொருத்திய அனைத்து ஆணிகளும் மாற்றவும். தங்க அடுக்குகளுக்கு இடையே உள்ள இடைவெளிகளில் கசிவைத் தடுக்க, சரிசெய்யும் பணி கடந்த மாதம் 22ம் தேதி துவங்கியது. ஓணத்திற்கு கோவில் நடை திறப்பதற்குள் பணிகள் முடிந்து விடும் என தேவசம் போர்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also see... ஆவணி அமாவாசை... மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் ஊஞ்சல் உற்சவம்

ஆகஸ்ட் 22ம் தேதி சிங்கமாச பூஜைகள் முடிந்து சபரிமலை நடை மூடப்பட்டது. மேலும் திருவோணம் பண்டிகையை யொட்டி சிறப்பு பூஜைகளுக்காக செப்டம்பர் 6ம் தேதி சபரிமலை நடை திறந்து 10 ஆம் தேதி  மூடப்படும். அதன்பின், கன்னிமாச பூஜைகளுக்காக, செப்டம்பர் 16ம் தேதி திறக்கப்பட்டு, 21ம் தேதி மூடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Ayyappan temple in Sabarimala, High court, Kanniyakumari, Kerala

அடுத்த செய்தி