Home /News /kanniyakumari /

நல்லா சம்பாதிக்கிறோம்.. பொண்ணு இருக்கா சொல்லுங்க கட்டிக்கிறோம் - மணக்கோலத்தில் குமரியை வலம் வரும் இளைஞர்கள்

நல்லா சம்பாதிக்கிறோம்.. பொண்ணு இருக்கா சொல்லுங்க கட்டிக்கிறோம் - மணக்கோலத்தில் குமரியை வலம் வரும் இளைஞர்கள்

மண மகள் தேவை

மண மகள் தேவை

Kanniyakumari | கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வரதட்சணை ஒழிப்புக்காக நூதனமாக பிரச்சாரம் மேற்கொண்ட பொறியியல், பட்டதாரி இளைஞர்கள்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Kanniyakumari (Kanyakumari), India
    கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி பகுதியைச் சேர்ந்த எம்.எஸ்.சி., படித்து வரும் ஜெனிஷ் மோன் , மற்றும் பி.இ., படித்து முடித்து விட்டு எம்.பி.ஏ., படித்து வரும் சுனிஷ் ஆகிய இரு பட்டதாரி இளைஞர்கள் கடந்த சில மாதங்களாக வித்தியாசமான காமெடி நிகழ்ச்சிகள் மேற்கொண்டு சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து பொதுமக்களை ஈர்த்து வந்தனர். 

    இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூல் பக்கங்களில் அவர்களது வீடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வித்தியாசமான நிகழ்ச்சியை மேற்கொள்ள வேண்டும் என திட்டமிட்ட இரு இளைஞர்களும்,  நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் பயணிகள் பரபரப்பாக காணப்பட்ட நேரத்தில் வரதட்சணை எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.

    இருவரும பட்டு வேட்டி, சட்டை, கூலிங்கிளாஸ் என மணமகன் கோலத்தில் கழுத்தில் விளம்பர பலகை தொங்க விட்ட வண்ணம் பொதுமக்களின் முன்பு தங்கள் விளம்பர பலகையை காண்பித்தும்   திருமணம் செய்வதற்கு மணமகள் இருக்கிறார்களா எனக் கேட்ட வண்ணம் வலம் வந்தனர். தங்கள் கழுத்தில் தொங்கவிடப்பட்ட அட்டையில், மணமகள் தேவை என்ற தலைப்புடன் வரதட்சணையாக கார், தங்கம், பணம் போன்றவை தேவையில்லை, சாதி, மதம் தேவையில்லை எனவும்  குறிப்பிட்டு அந்த அட்டையை பொதுமக்களிடம் காண்பித்து பிரச்சாரம் மேற்கொண்டனர்.



     




    View this post on Instagram





     

    A post shared by Jenish Mon (@jenish_mon_batrick)






    அங்கு நின்று கொண்டிருந்த இளைஞர்களிடம் வரதட்சணை கேட்கக் கூடாது எனவும் பணத்தைவிட குணத்தை எதிர்பார்த்து பெண்களை தேர்ந்தெடுங்கள் எனவும் கூறினர்.  இவர்களது நூதனப் பிரச்சாரம் பார்ப்பவர்களுக்கு  வித்தியாசமாக காணப்பட்டது. தங்களது முயற்சி சமூகத்தில் வரதட்சணைக்கு எதிரான மாற்றத்தை ஏற்படுத்தும் என அவர்கள் நம்பிக்கையுடன் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.



    Also see... என் வாழ்வின் பொன்னாள் இது:காலை உணவு திட்ட விழாவில் முதல்வர்

    தங்கள் நூதன பிரச்சாரம் தொடர்பாக இரு இளைஞர்களும் கூறுகையில், ”தாங்கள் கை நிறைய சம்பளம் வாங்கும் பொறியியல் பட்டதாரி எனவும் சாதாரணமாக வரதட்சணை வாங்கக்கூடாது, வரதட்சணை ஒழிக என்றெல்லாம் நாம் முழக்கங்கள் எழுப்பி பிரச்சாரம் செய்தால் கிண்டலாக பொதுமக்கள் பார்க்கும் நிலை உள்ளது. அதனால் மணமகன் கோலத்தில், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் மக்களை ஈர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இவ்வாறு பிரச்சாரம் மேற்கொண்டதா” தெரிவித்தனர்.



     




    View this post on Instagram





     

    A post shared by Jenish Mon (@jenish_mon_batrick)






    பேருந்து நிலையங்களில் அனைத்து வயது மக்களும் வரும் நிலையில் தங்களது முயற்சி சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான தூண்டுகோலாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் கூறினர்.

    செய்தியாளர்: ஐ.சரவணன், நாகர்கோவில்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Dowry, Kanniyakumari, Marriage

    அடுத்த செய்தி