ஹோம் /நியூஸ் /கன்னியாகுமரி /

உறவினர் வீட்டில் நகைகளை திருடி நண்பர்களுக்கு மது விருந்து வைத்த வாலிபர் கைது!

உறவினர் வீட்டில் நகைகளை திருடி நண்பர்களுக்கு மது விருந்து வைத்த வாலிபர் கைது!

உறவினர் வீட்டில் திருடி, அடகு வைத்து நண்பர்களுடன் மது விருந்து கொண்டாடிய வாலிபர் கைது.

உறவினர் வீட்டில் திருடி, அடகு வைத்து நண்பர்களுடன் மது விருந்து கொண்டாடிய வாலிபர் கைது.

சாரோன் கடந்த மாதம் ஹரிகுமாரின் வீட்டில் இருந்த 7 சவரன் தங்க நகைகளை லாவகமாக திருடி எடுத்து சென்று அதனை தனது நண்பர்களுடன் சேர்ந்து அடகு வைத்து மது விருந்து கொண்டாடி உள்ளான்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kanniyakumari (Kanyakumari), India

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே உறவினர் வீட்டில் நகைகளை திருடி, அடகு வைத்து நண்பர்களுக்கு மது விருந்து கொடுத்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே கல்லடிவிளை பகுதியை சேர்ந்தவர் ஹரிகுமார். வெளிநாட்டில் வேலை செய்து வரும் இவரது உறவினர் மகனான சாரோன் 22, படித்து முடித்துவிட்டு வேலைக்கு ஏதும் செல்லாமல் நண்பர்களுடன் கஞ்சா, மது விருந்து என சுற்றி திரிந்து வந்துள்ளார்.

ஹரிகுமார் வெளிநாட்டில் வேலை செய்து வருவதால் அவரது வீட்டு தேவைகளை செய்து கொடுக்க வேண்டி சாரோன் அடிக்கடி அவரது வீட்டிற்கு சென்று வருவது வழக்கம். இதனை பயன்படுத்தி கொண்ட சாரோன் கடந்த மாதம் ஹரிகுமாரின் வீட்டில் இருந்த 7 சவரன் தங்க நகைகளை லாவகமாக திருடி எடுத்து சென்று அதனை தனது நண்பர்களுடன் சேர்ந்து அடகு வைத்து மது விருந்து கொண்டாடி உள்ளான்.

போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த மாணவர்களுடன் கராத்தே மாஸ்டர் செய்த குரங்கு ஓட்டம்!

இந்த நிலையில் ஹரிகுமார் வெளிநாட்டில் இருந்து சமீபத்தில் விடுமுறைக்கு ஊருக்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த நகைகளை எடுத்து பார்த்தபோது நகைகள் காணாமல் போயிருந்தது தெரியவந்தது. இது சம்பந்தமாக அவரது மனைவியிடம் ஹரிகுமார் கேட்டுள்ளார். அதற்கு அவருக்கும் தெரியவில்லை என தெரிவிக்க, சந்தேகமடைந்த ஹரிகுமார் அருமனை போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்று வந்த சாரோனை பிடித்து நடத்திய விசாரணையில் நகைகளை திருடியதை ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து போலீசார் சாரோனை கைது செய்து நகையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Crime News, Gold Theft, Kanyakumari