ஹோம் /நியூஸ் /கன்னியாகுமரி /

`ஸ்லோ பாய்சன்’ கணவனுக்கு போட்ட ஸ்கெட்ச்.. காட்டிக்கொடுத்த வாட்ஸ் அப் சாட் - விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற பெண்

`ஸ்லோ பாய்சன்’ கணவனுக்கு போட்ட ஸ்கெட்ச்.. காட்டிக்கொடுத்த வாட்ஸ் அப் சாட் - விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற பெண்

கன்னியாகுமரி

கன்னியாகுமரி

Crime News : கணவனை கொலை செய்ய முயன்ற பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதையடுத்து அவர் தற்கொலை முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Kanniyakumari (Kanyakumari), India

  கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே ஆழ்வார் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் முருகன் (32). கட்டுமான தொழிலாளியான இவருக்கும் இறச்ச குளம் பகுதியைச் சேர்ந்த சுஜா(24) என்பவருக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி திருமணம் நடைபெற்றது.  புதுமண தம்பதியர் திருமணத்திற்கு பின்பு இரண்டு மாதங்கள் வரை மகிழ்ச்சியாக வாழ்ந்துள்ளனர்.

  இந்நிலையில்  கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வடிவேல் முருகன் ஒருநாள் இரவில் திடீரென வீட்டில் நினைவிழந்து மயங்கி விழுந்தார். இதனையடுத்து உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனை சிகிச்சையில் நலம் பெற்று வீடு திரும்பினார். மீண்டும் சில நாள்கள் கழித்து வடிவேல் முருகனுக்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மனைவி சுஜாவின் செயல்பாடுகள் முருகனுக்கு சந்தேகம் எழுந்தது.

  அதிர்ச்சி கொடுத்த வாட்ஸ் அப் சாட்:

  சுஜாவுக்கு அவரின் முன்னாள் காதலருக்கும் இடையே மீண்டும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பது வடிவேல் முருகனுக்கு தெரியவந்துள்ளது. மனைவியின் செல்போனை வடிவேலு கண்காணித்ததில் வாட்ஸ் அப் சாட்டில் பல அதிர்ச்சிகரமான தகவல் தெரியவந்துள்ளது.

  அந்த சாட்டில் காதலனுக்கு தனது மனைவி அனுப்பிய மெசேஜ் மூலம் தனக்கு மருந்தில் விஷம் கலந்து தந்துள்ளதாக பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. இதனையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.   இந்நிலையில் வடிவேல் முருகன்  காவல்நிலையத்தில்  மனைவி மற்றும் அவரது காதலன் மீது புகார் அளித்தார்.

  Also Read:  “அம்மா தூங்குறாங்க” - மனைவியை கொலை செய்து குழந்தைகளிடம் நாடகமாடிய கணவன்!

  வடிவேல் முருகனின் கொடுத்த புகாரின் பேரில் மனைவி சுஜா மீது இரணியல் போலீசார் இந்திய தண்டனைச் சட்டம் 328 படி வழக்கு பதிவு செய்தனர். மேலும் தலைமறைவான சுஜாவை தொடர்ந்து போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் சுஜா விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சித்ததாக கூறி குடும்பத்தினரால் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் உடலில் எவ்வித பாதிப்பும் இல்லை எனவும் உடல்நிலை நன்றாக  உள்ளது எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

  செய்தியாளர் : சரவணன் ( நாகர்கோவில்)

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Crime News, Kanniyakumari