கன்னியாகுமரியில் பூட்டிய வீடுகளில் தொடர்கொள்ளையில் ஈடுபட்டு வந்த பலே கொள்ளையன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே பெருமாள்புரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான தோவாளை, மாதவலாயம் பகுதிகளில் பூட்டிய வீடுகளில் புகுந்து கடந்த சில நாட்களுக்கு முன் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றன. இதுகுறித்த புகார்களின் பேரில் ஆரல்வாய்மொழி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
மேலும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. அந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அம்பாசமுத்திரம் பகுதியில் நடந்த திருட்டு சம்பவம் தொடர்பாக போலீசார் நாமக்கல்லில் உள்ள ஒரு விடுதியில் வைத்து ஒருவரை கைது செய்தனர். பின்னர் நடத்திய விசாரணையில், அவர் குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அருகே முகிலன் குடியிருப்பை சேர்ந்த சுடலைபழம் (வயது 48) என்பதும், குமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் சுடலைபழத்தை குமரி மாவட்டம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் ஆரல்வாய்மொழி பெருமாள்புரத்தில் 3 வீடுகள், தோவாளை கமல்நகர், மாதவலாயம் ஆகிய 5 இடங்களில் திருடியதை ஒப்புக்கொண்டார். அவரிடம் இருந்து நகை மற்றும் பணத்தை மீட்கும் பணி நடந்து வருகிறது.
Also Read: இன்ஸ்டா பெண்கள்தான் குறி.. போட்டோவை ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டல்.. தென்காசி வாலிபர் கைது
சுடலைபழத்துக்கு மோட்டார் சைக்கிள் ஓட்ட தெரியாது. இதனால் எங்கு திருடச் சென்றாலும் அவர் பஸ்சில் செல்வது வழக்கமாம். அந்த ஊருக்கு சென்றதும் பகலில் பூட்டி கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் பதுங்கி இருந்து அதிகாலையில் கைவரிசை காட்டி வந்துள்ளார்.
கையில் கிடைத்த நகை, பணத்துடன் சென்னை, ஐதராபாத், கேரளாவுக்கு சென்று அங்கு உயர்தர விடுதிகளில் தங்கி துணை நடிகைகளிடம் உல்லாசமாக இருந்தது விசாரணையில் அம்பலமானது. சுடலைபழம் விசாரணைக்கு பின் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
செய்தியாளர்: ஐ.சரவணன் (நாகர்கோவில்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Kanyakumari, Local News, Tamil News