ஹோம் /நியூஸ் /கன்னியாகுமரி /

கல்லூரி மாணவியை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டல்.. 2 ஆண்டுகளுக்கு பின் சிக்கிய இளைஞர்

கல்லூரி மாணவியை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டல்.. 2 ஆண்டுகளுக்கு பின் சிக்கிய இளைஞர்

இளைஞர் போக்சோவில் கைது

இளைஞர் போக்சோவில் கைது

Kanyakumari Crime news : கல்லூரி மாணவி ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டல் விடுத்த இளைஞர் இரண்டு ஆண்டுகளுக்கு பின் போக்சோவில் கைது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Nagercoil, India

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியை சேர்ந்தவர் அபிஷேக்  (22). இவர் கடந்த 2020  ம் ஆண்டு நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்த போது  சக மாணவி ஒருவரிடம் நெருங்கி பழகியுள்ளார். அப்போது  மாணவியை நண்பரின் வீட்டுக்கு அழைத்து சென்று  குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து  அபிஷேக் கொடுத்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து மயக்கமடைந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததோடு அதனை வீடியோ பதிவு செய்துள்ளார்.  இங்கு நடந்ததை வெளியில் கூறினால் இந்த வீடியோவை சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து விடுவேன் எனக் கூறி மிரட்டியுள்ளார். இதனால் மாணவி இதுகுறித்து வெளியில் கூறாமல் மவுனம் காத்து வந்துள்ளார்.

இந்நிலையில் கல்லூரி படிப்பு முடிந்த பின்னரும் அந்த வீடியோவை காட்டி மிரட்டி வந்துள்ளார். தொடர் மிரட்டல்களால் அச்சமடைந்த மாணவி நடந்த சம்பவம் குறித்து தனது பெற்றோர்களிடம் கூறியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்தவர்கள் உடனடியாக நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீஸார் அபிஷேக் மீது போக்சோ சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையும் படிங்க:  ஷேர் ஷாட்டில் பழக்கம்.. தனிமையில் உல்லாசம் - காதலித்து ஏமாற்றிய ராணுவ வீரரின் திருமணத்தை நிறுத்திய காதலி

இந்நிலையில் அபிசேக் துபாய் நாட்டிற்கு தப்பி சென்றுள்ளார். சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக வெளிநாட்டில் இருந்த நிலையில் நேற்று விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்துள்ளார். இந்நிலையில் விமானநிலையத்தில் வைத்தே போலீஸார் அவரை கைது செய்தனர். திருவனந்தபுரத்தில் இருந்து அவரை நாகர்கோவில் அழைத்து வந்தனர்.

மேலும் அபிசேக் வெளிநாடு தப்பிச்செல்ல துணை புரிந்த அவரது தந்தை வில்சன்குமார் மற்றும் அபிசேக்கின் நண்பர் அனீஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனைத்தொடர்ந்து அபிசேக்கிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

செய்தியாளர்: ஐ.சரவணன் ( நாகர்கோவில்)

First published:

Tags: Crime News, Kanyakumari, Local News, POCSO case, Tamil News, Video