கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ஆன்றோ சகாயராஜ் மீன்பிடி தொழிலாளியான இவருக்கு பவுலின் மேரி என்ற மனைவி இருந்தார். மேலும், அலன், ஆரோன் என இரண்டு மகன்களும் உள்ளனர். ஆன்றோ சகாயராஜ் மற்றும் மூத்த மகன் அலன் ஆகியோர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர். இளைய மகன் ஆரோன் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.
இந்நிலையில், மனைவி பவுலின்மேரி அவரது தாயார் திரேசம்மாள் உடன் முட்டம் பகுதியில் ஆள் அரவமற்ற பல ஏக்கர் விவசாய நிலத்திற்கு நடுவே அமைந்துள்ள பங்களா வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த 6ஆம் தேதி இரவு தாய் திரேசம்மாள் மற்றும் மகள் பவுலின் மேரி உறவினர் ஒருவரிடம் செல்போனில் பேசி விட்டு தூங்க சென்றதாக தெரிகிறது 7ஆம் தேதி காலை அவர்கள் மீண்டும் பவுலின் மேரியை செல்போணில் தொடர்பு கொண்ட போது பதிலளிக்காகவில்லை.
இதனால், உறவினர்கள் 7-ம் தேதி மதியம் நேரடியாக வீட்டிற்கு வந்துள்ளனர் அப்போது வீட்டின் கதவு பூட்டிய நிலையில் ஆள் அரவமின்றி காணப்பட்டதால் சந்தேகமடைந்த அவர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.
அப்போது தாயும் மகளும் வீட்டின் நடு தளத்தில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளனர். உடனடியாக அவர்கள் வெள்ளிச்சந்தை போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்து வெள்ளிச்சந்தை போலீசார் விசாரணை நடத்திய நிலையில் நெல்லை சரக டிஐஜி பிரவேஷ் குமார், எஸ்.பி.ஹரி கிரண் பிரசாத் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்ததோடு கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் அந்த பங்களா வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள் முதலில் வீட்டிற்கு வெளியே இருந்த மின்சார மீட்டரை உடைத்து மின்சாரத்தை துண்டித்து விட்டு, பின்னர் வீட்டின் முன்பக்க கதவை திறந்து வீட்டிற்கு புகுந்து, வீட்டில் இருந்த அயர்ன் பாக்ஸ்சால் தாய் மற்றும் மகளை தலையில் கடுமையாக தாக்கி கொலை செய்து விட்டு பவுலின் மேரி கழுத்தில் கிடந்த 11-சவரன் தாலி சங்கிலி தாய் திரேசம்மாள் கழுத்தில் கிடந்த 5-சவரன் தங்க சங்கிலி என 16-சவரன் தங்க நகைகளை அறுத்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார் என்பது தெரியவந்தது.
70-சவரனுக்கு மேற்பட்ட தங்க நகைகள் தப்பியதாக தெரிகிறது. ஆனால் மர்ம நபர்கள் கொள்ளையடிக்க திட்டம் போட்டு தாயும் மகளையும் கொலை செய்தார்களா, இல்லை அப்பகுதியில் மூகாமிட்ட கஞ்சா கும்பல் முன் விரோதம் காரணமாக இந்த கொலையை செய்திருக்கலாமா என்ற சந்தேகம் எழுந்த நிலையில்
மர்ம நபர்களை பிடிக்க 5-தனிப்படைகளை அமைத்து நெல்லை சரக டிஜஜி பிரவேஷ்குமார் மற்றும் எஸ்பி ஹரி கிரண் பிரசாத் ஆகியோர் உத்தரவிட்டார்.
5-தனிப்படை அமைத்து உத்தரவிட்ட நிலையில் அவர்கள் அயர்ன் பாக்ஸ் மற்றும் கைரேகையை முக்கிய தடயமாக வைத்து விசாரணையை முன்னெடுத்த நிலையில், மேலும் ஒரு தடயமாக வீட்டு தோட்டத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட மங்கி குல்லாவின் வீடியோவை டிஎஸ்பி தங்கராமன் வெளியிட்டு விசாரணை நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து, 15-நாட்களாக கஞ்சா கும்பலை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட நபர்களை பிடித்து கிடுக்குபிடி விசாரணை நடத்தியும் அவர்களிடம் இருந்து எந்த தடயமோ ஆதாரமோ சிக்காத நிலையில், கொலையாளிகள் யார்? என்பதில் தொடர்ந்து மர்மம் நீடித்து வந்த நிலையில் 15-நாட்களுக்கு பின் மங்கி குல்லா அணிவதை வாடிக்கையாக கொண்ட கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த அமல சுமன் என்பவரை பிடித்து விசாரணை செய்தனர்.
அப்போது, தாய் மகள் இருவரையும் கொலை செய்ததை ஒப்பு கொண்டார் இதனையடுத்து அவரிடம் இருந்து நகைகள் மீட்க பட்ட நிலையில், கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து தனிப்படை போலீசார் நடத்திய கிடுக்குபிடி விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது.
கொலையாளி கைது:
கொலை குற்றாவாளி முட்டத்தை அடுத்த கடியப்படணம் மீனவர் கிராமத்தை சேர்ந்த 36-வயதான அமலசுமன் என்பதும் மீன்பிடி தொழிலாளியான இவர், திருமணம் ஆகி சில மாதங்களிலேயே மனைவியை பிரிந்த நிலையில் முட்டம் பகுதியை சேர்ந்த கள்ள காதலியுடன் குடும்பம் நடத்தி வந்ததாகவும், பல பெண்களை காதல் வலையில் வீழ்த்தி அவர்களை மிரட்டி அவர்களுடன் உல்லாசமாக இருப்பதையும் வாடிக்கையாக வைத்துள்ளதும் தெரியவந்தது.
இந்நிலையில், கொலை செய்யப்பட்ட பவுலின் மேரி வீட்டில் நடத்தி வரும் தையல் பயிற்சி வகுப்பிற்கு வரும் இளம்பெண் ஒருவரை ஆசை வார்த்தைகள் கூறி துரத்தி துரத்தி காதலித்து வந்ததாகவும், அந்த இளம்பெண் சம்மதிக்காமல் தகராறில் ஈடுபடட்டதோடு சம்பவம் குறித்து பவுலின் மேரியிடம் தெரிவித்த நிலையில்
கடந்த 1ஆம் தேதி பவுலின் மேரி தன்னை தடுத்து நிறுத்தி தகாத வார்த்தைகளை கூறி தகராறில் செய்ததாகவும் இதனால் கோபமடைந்ததாக தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
எனவே, கடந்த 6 ஆம் தேதி குடி போதையில் பவுலின் மேரி வீட்டிற்கு சென்று காலிங் பெல்லை அடித்த போது, அவர் வராததால் மின் மீட்டரை அடித்து நொறுக்கி திரும்பியதாகவும், மீண்டும் பவுலின் மேரியின் வீட்டிற்கு திரும்பி வந்தபோது மின் இணைப்பு இருந்த நிலையில் மீண்டும் காலிங் பெல்லை அடிக்க அவர் கதவை திறந்தவுடன் வீட்டிற்குள் சென்று அவரிடம் தகராறில் ஈடுபட்டு, பவுலின் மேரியை வீட்டில் இருந்த அயர்ன் பாக்ஸ் ஒயரால் கழுத்தை இறுக்கி, பின்னர் அங்கிருந்த சுத்தியலால் அவர் தலையில் ஓங்கி அடித்து கொலை செய்ததாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.
மேலும், அப்போது தடுக்க வந்த அவரது தாயார் திரேசம்மாளையும் சுத்தியலால் தலையில் அடித்து கொலை செய்து விட்டு கொலையை திசை திருப்ப பவுலின் மேரி கழுத்தில் கிடந்த 11-சவரன் தாலி சங்கிலி கம்மல் மற்றும் திரேசம்மாள் கழுத்தில் கிடந்த 3-சவரன் தங்க சங்கிலியையும் கொலைக்கு பயன்படுத்திய சுத்தியலை எடுத்து கொண்டு வீட்டின் முன்பக்க கதவை சாவியால் பூட்டி தப்பி சென்றதாகவும், அதில் தான் அணிந்திருந்த மங்கி குல்லா தொப்பி தவறி விழுந்து விட்டதாகவும் அது தடயமாக மாறி சிக்க வைத்து விட்டதாகவும் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்தார்.
மேலும், பறித்த தாலி சங்கிலியை மணவாளக்குறிச்சி முத்தூட் மினி பைனாஸ்-ல் அடகு வைத்து, சூரப்பள்ளத்தில் உள்ள கள்ள காதலியுடன் இரண்டு நாள் சொகுசாக சுற்றி வந்ததாகவும்,
போலீசார் கஞ்சா கும்பலை சேர்ந்தவர்களை விசாரிக்க தொடங்கியவுடன் அடிக்கடி கொலை செய்த வீட்டருகே வந்து ஒன்றும் தெரியாதது போல் தினம் நடக்கும் விசாரணை தகவல்களை கேட்டறிந்து சென்று வந்ததாகவும் கூறினார்.
இதனையடுத்து அமலசுமன் பயன்படுத்திய பைக், நகைகளை பறிமுதல் செய்த வெள்ளிச்சந்தை போலீசார் அமலசுமனனை கைது செய்து இரணியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Confession, Double murder, Kanyakumari, Murder