ஹோம் /நியூஸ் /கன்னியாகுமரி /

காதல் உண்மையென்றால் மார்பில் பச்சைக்குத்து.. காதலன் டார்ச்சர் - காதலி செயலால் பரபரப்பு

காதல் உண்மையென்றால் மார்பில் பச்சைக்குத்து.. காதலன் டார்ச்சர் - காதலி செயலால் பரபரப்பு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

Kanyakumari district News : இளைஞர் ஒருவர் தனது காதலியின் மார்பில் தன்னுடைய பெயரை பச்சை குத்தச் சொல்லி டார்ச்சர் கொடுத்த சம்பவம் கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kanniyakumari (Kanyakumari), India

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்தவர் அபினேஷ் (வயது 28). இவர் அந்தப்பகுதியில்  பூ வியாபாரம் செய்து வருகிறார்.  பக்கத்து ஊரைச் சேர்ந்த, இளம்பெண் ஒருவர் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், கல்லூரி மாணவிக்கும், அபினேஷ்க்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அந்த பழக்கம் காதலாக மலர்ந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து மாணவி எங்கு சென்றாலும் காதலன் பின்தொடர்ந்து சென்றதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில், மாணவி தன்னை உண்மையாக காதலிக்கிறாரா? என்பதை அறிந்து கொள்ள விரும்பிய அபினேஷ் , மாணவியின் மார்பில் தன்னுடைய பெயரை பச்சை குத்தச் சொல்லி வற்புறுத்தியுள்ளார். வாலிபரின் காதல் லீலை அத்துமீறி செல்வதை பார்த்த மாணவி பயந்து அரண்டு போயுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அபினேஷின் தொடர் டார்ச்சர் காரணமாக, கோபமடைந்த மாணவி இதுகுறித்து தனது குடும்பத்தாரிடம் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் தந்தை மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் இளைஞர் அபினேஷ் மீது புகார் கொடுத்தார்.இதனால் உஷாரான போலீசார், அந்த வாலிபரை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

Must Read : தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்து கொண்ட பெண் உயிரிழப்பு - தியாகதுருகத்தில் உறவினர்கள் சாலை மறியல்

வாலிபரிடம் விசாரித்த போது தான் மாணவியை காதலிப்பதாகவும் அவள் தனக்கு வேண்டும் எனவும் கூறிவருகிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Kanyakumari, Love, Tattoos, Torture