ஹோம் /நியூஸ் /கன்னியாகுமரி /

ஓட ஓட விரட்டி நிலத்தரகர் வெட்டிக்கொலை.. சோமேட்டோ உடை அணிந்த நபர் வெறிச்செயல் - குமரியில் பயங்கரம்

ஓட ஓட விரட்டி நிலத்தரகர் வெட்டிக்கொலை.. சோமேட்டோ உடை அணிந்த நபர் வெறிச்செயல் - குமரியில் பயங்கரம்

நிலத்தரகர் கொலை

நிலத்தரகர் கொலை

Crime News : நாகர்கோவிலில் பட்டப்பகலில்  ஓட ஓட விரட்டி நில புரோக்கர் கொலை செய்யப்பட்ட சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Nagercoil, India

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே செல்லங்கோணம்  பகுதியை சேர்ந்தவர் சேவியர் பாபு(57) . இவர் நிலத்தரகராக இருந்து  வந்துள்ளார். இந்நிலையில்  நாகர்கோவிலில் அமைந்துள்ள பத்திர பதிவுத்துறை  அலுவலகம் செல்லும் சாலையில் சேவியர் பாபு தனது நண்பர் மோகன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது சோமேட்டோ நிறுவன  உடை அணிந்து வந்த நபர் ஒருவருக்கும் இவர்களுக்கும் இடையே கடும்  வாக்குவாதம்  ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபம்  அருகாமையில் வரும் போது இருசக்கர வாகனங்களை நிறுத்தி தகராறில் ஈடுபட்டு உள்ளனர். அப்போது  சோமேட்டோ நிறுவன உடையணிந்த நபர்  மறைத்து வைத்திருந்த கத்தியால் மோகன் மற்றும் சேவியர் பாபு ஆகிய இருவரையும் சரமாரியாக குத்தியுள்ளனர். திடீர் தாக்குதலை அடுத்து இருவரும் உயிருக்கு பயந்து சாலையில் ஓடி உள்ளார்.

மர்மநபர் இருவரையும் விரட்டி விரட்டி தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சேவியர் பாபு சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இக்கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த கோட்டார் போலீஸார் சேவியர் பாபு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த  மோகனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மோகன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த கொலை சம்பவம் குறித்து கோட்டார் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  மேலும் பத்திரப்பதிவுத்துறை  செல்லும் சாலையில் வரும் போது இரு தரப்பினரும் பேசிய படி வரும் சிசிடிவி  கேமரா பதிவுகள் வெளியாகி உள்ளது. பட்டப்பகலில்  ஓட ஓட விரட்டி நில புரோக்கர் கொலை செய்யப்பட்ட சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் : ஐ.சரவணன்  (நாகர்கோவில்)

First published:

Tags: Crime News, Kanyakumari, Local News, Murder, Tamil News