ஹோம் /நியூஸ் /கன்னியாகுமரி /

கள்ளக்காதலனுடன் சேர்ந்து இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.. அம்மா இறந்தது கூட தெரியாமல் பரிதவித்த குழந்தைகள் - குமரியில் சோகம்

கள்ளக்காதலனுடன் சேர்ந்து இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.. அம்மா இறந்தது கூட தெரியாமல் பரிதவித்த குழந்தைகள் - குமரியில் சோகம்

தாய் உடல் அருகே காரில் அமர்ந்திருந்த குழந்தைகள்

தாய் உடல் அருகே காரில் அமர்ந்திருந்த குழந்தைகள்

தனது தாய் உயிரிழந்து கிடப்பது தெரியாமல், அம்மா தூங்குவதாக நினைத்து இரு குழந்தைகளும் காரில் இருந்த பரிதாபம்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kanniyakumari, India

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி பகுதியில் சில நாட்களுக்கு முன் காணாமல் போன இரு குழந்தைகளின் தாய், முன்னாள் காதலனுடன்  ஆரல்வாய்மொழியில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்தவர்  ஆரோக்கிய சூசை நாதன் ( 35) , இவர் கடியப்பட்டணம் பகுதியில் வாடகை கார் ஓட்டுனராக இருந்து வருகிறார். இவர் மண்டைக்காடு புதூர் பகுதியை சேர்ந்த திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ள ஷாமினி என்ற பெண்ணுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த  மாதம் முன்பு ஆரோக்கிய சூசைநாதன்  தனது மனைவி மற்றும் குழந்தைகளை விட்டுவிட்டு ஷாமினியுடன் ஊரை விட்டு சென்றுள்ளார். இதுகுறித்து மணவாளக்குறிச்சி காவல் நிலையத்தில் கடந்த ஒரு மாதம் முன்பு ஷாமினியின் கணவர் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டு இருவரையும் போலீசார் மீட்டனர்.

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மீண்டும் ஷாமினி தனது இரு ஆண் குழந்தைகளுடன் மாயமாகியதாக மணவாளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆரல்வாய்மொழி பகுதியில் தேவசகாயம் மவுண்ட் பகுதியில் உள்ள தேவாலயம் முன்பு டாட்டா சுமோ  காரில் நேற்று இரவு வந்துள்ளனர். காரில் இரண்டு குழந்தைகளையும் தூங்க வைத்துவிட்டு, தென்னை மரத்திற்கு பயன்படுத்தப்படும் விஷத்தை குடித்து இருவரும் தற்கொலை செய்துள்ளனர்.

இதையும் படிங்க: ஆபாசக்கூத்து.. கைதேர்ந்த கேடி... கவிஞர் தாமரை காட்டம்.. சிக்கலில் விஜி பழனிச்சாமி

 இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசாருக்கு அப்பகுதியினர்  அளித்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். மேலும் ஆரோக்கிய சூசைநாதனின்  செல்போன் மூலம் அவரது மனைவி மற்றும் உறவினர்களை  தொடர்பு கொண்டும் விவரத்தை சேகரித்தனர்.

தனது தாய் உயிரிழந்து கிடப்பது தெரியாமல், அம்மா தூங்குவதாக நினைத்து இரு குழந்தைகளும் காரில் இருந்த நிலையில், சம்பவ இடத்தில் பரபரப்பு ஏற்பட்டதை தொடர்ந்து கதறி  அழுதது பார்ப்பவர்களை சோகத்தில் ஆழ்த்தியது. தகாத உறவு தற்கொலையில்  முடிந்துள்ள நிலையில் எதுவும் தெரியாத குழந்தைகளின் நிலைமை பரிதாபமாக காணப்படுகிறது.

First published:

Tags: Crime News, Kanniyakumari, Local News, Tamil News