முகப்பு /செய்தி /கன்னியாகுமரி / காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை கடத்திய பிரபல ரவுடி.. சி.எம் செல்-க்கு பறந்த புகார்..அதிரடி உத்தரவால் மாணவி மீட்பு

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை கடத்திய பிரபல ரவுடி.. சி.எம் செல்-க்கு பறந்த புகார்..அதிரடி உத்தரவால் மாணவி மீட்பு

கல்லூரி மாணவி கடத்தல்

கல்லூரி மாணவி கடத்தல்

Crime News : கன்னியாகுமரியில் பிரபல ரவுடியால் கல்லூரி மாணவி கடத்தப்பட்ட வழக்கில் முதலமைச்சர் தனிப்பிரிவு அலுவலகத்தில் மாணவியின் தந்தை நேரடியாக புகாரளித்த நிலையில் மீட்பு.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanniyakumari (Kanyakumari), India

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி கடந்த நவம்பர் மாதம் 16-ம் தேதி கல்லூரிக்கு சென்றுவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இரவு நீண்டநேரமாகியும் மகள் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடியுள்ளார். மகளை கிடைக்காத நிலையில் இதுகுறித்து மாணவியின் தந்தை குளச்சல் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அப்பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி தனது மகளை கடத்தியிருக்ககூடும் என அந்தப்புகாரில் தெரிவித்திருந்தார்.

குளச்சல் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி விஜிமோன். இவர் மீது குளச்சல், இரணியல் காவல்நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. விஜி மோன் கல்லூரி மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். தன்னுடைய காதலை ரவுடி விஜிமோன் தெரியப்படுத்திய நிலையில் கல்லூரி மாணவி காதலை ஏற்க மறுத்துள்ளார். இதன்காரணமாக ஆத்திரமடைந்த விஜி மோன் கடந்த நவம்பர் மாதம் மாணவியை கடத்தியுள்ளார்.

ரவுடி விஜிமோன் தனது தாய் விஜி உறவுக்கார பெண் சகாயராணி மற்றும் நண்பர்களுடன் சேர்த்து இளம்பெண்ணை காரில் கடத்தியது தெரியவந்தது. போலீசில் புகார் அளித்தும் மகளை மீட்க முடியவில்லை. இந்நிலையில் போலீசார் தனது மகளை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி கல்லூரி மாணவியின் தந்தை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். போலீஸ் தரப்பில் இருந்து இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை.

இதனையடுத்து கடந்த வியாழக்கிழமை தலைமை செயலகத்துக்கு வந்த கல்லூரி மாணவியின் தந்தை தமிழ்நாடு முதலமைச்சர் அலுவலக தனிப்பிரிவில் தனது மகளை கண்டுபிடித்து தரக்கோரி புகார் அளித்தார். இதனையடுத்து கல்லூரி மாணவியை உடனடியாக கண்டுபிடித்து கடத்தலில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் நேற்று குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் கல்லூரி மாணவியை மீட்டனர். மேலும் ரவுடியுடன் கல்லூரி மாணவியை காரில் கடத்தி சென்ற அவரது தாயார் விஜி அவரது உறவினர் சகாயராணி ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் ரவுடி விஜிமோனை 2-தனிப்படை அமைத்து குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

First published:

Tags: College girl, College student, Crime News, Kanyakumari, One Sided Love, Tamil News