முகப்பு /செய்தி /கன்னியாகுமரி / சாலையில் சடலமாக மீட்கப்பட்ட டிரைவர்.. சாவில் மர்மம் என மனைவி புகார் - குமரியில் அதிர்ச்சி சம்பவம்

சாலையில் சடலமாக மீட்கப்பட்ட டிரைவர்.. சாவில் மர்மம் என மனைவி புகார் - குமரியில் அதிர்ச்சி சம்பவம்

டிரைவர் மரணம்

டிரைவர் மரணம்

Kanyakumari News : கன்னியாகுமரியில் டிரைவர் ஒருவர் சாலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanniyakumari (Kanyakumari), India

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே களியல் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 38).  இவர் கடந்தன்கோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். மணிகண்டன் பணிபுரியும் நிறுவனத்தில் வேலைக்கு தினமும் காலை 9 மணிக்கு சென்றுவிட்டு இரவு 9 மணிக்கு வீடு திரும்புவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று காலை 9 மணிக்கு வழக்கம்போல் வீட்டிலிருந்து வேலைக்கு கிளம்பிய மணிகண்டன் இரவு கடந்த பின்பும் வீடு திரும்பவில்லை.இதனால் சந்தேகமடைந்த மணிகண்டனின் மனைவி சுஜி பல இடங்களில் தேடியும் விசாரித்தும் பார்த்துள்ளார். ஆனால் எங்கும் கண்டு கிடைக்காத நிலையில் இன்று காலை குழித்துறை அருகே பாகோடு பகுதியில் உள்ள சாலையின் ஓரம் ஒருவர் இறந்து கிடந்ததாகவும் அவரது உடலை குழித்துறை அரசு மருத்துவமனையில் வைத்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்த சுஜி தனது குழந்தைகளுடன் பதைபதைக்க குழித்துறை அரசு மருத்துவமனைக்கு வந்து அங்கு வைக்கப்பட்டிருந்த உடலை பார்த்தபோது அது மணிகண்டன் தான் என உறுதியானது. மேலும் அவரது உடலின் பல்வேறு பாகங்களில் காயங்கள் இருப்பதை கண்ட சுஜி தனது கணவரை யாரோ அடித்து கொலை செய்திருப்பதாக கூறி மார்த்தாண்டம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Crime News, Death, Kanyakumari, Local News, Tamil News