முகப்பு /செய்தி /கன்னியாகுமரி / குமரியில் பெண்ணை கொடூரமாக தாக்கி பாலியல் வன்கொடுமை.. இளைஞர் கைது - பெண் உயிரிழந்த பரிதாபம்

குமரியில் பெண்ணை கொடூரமாக தாக்கி பாலியல் வன்கொடுமை.. இளைஞர் கைது - பெண் உயிரிழந்த பரிதாபம்

கைதானவர்

கைதானவர்

Crime News : கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே பக்கத்துவீட்டு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த பொறியியல் பட்டதாரி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanniyakumari, India

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 47 பெண்ணுக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் பொறியியல் பட்டதாரியான எட்வின் என்பவர் பலமுறை பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுக்க முயன்றுள்ளார். இதுகுறித்து அந்த பெண் எட்வினின் தாய் மற்றும் உள்ளூர் பிரமுகர்களுடன் புகார் அளித்துள்ளார். அவர்களும் எட்வினை  கண்டித்துள்ளனர்.

இதன்காரணமாக எட்வின் அந்த பெண்ணின் மீது ஆத்திரத்தில் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில், கடந்த 13ம் தேதி அந்த பெண் தனது உறவினர் ஒருவரின் புதுமனை புகுவிழாவிற்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து தனிமையில் படுத்திருந்தார். அப்போது எட்வின் வீட்டின் பின்புறம் வழியாக உள்ளே நுழைந்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண் கூச்சலிட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த எட்வின் அவரை சரமாரியாக தாக்கி கழுத்தை காலால் மிதித்துள்ளார். இதில் அந்த பெண் மயக்கமடைந்தார். இதையடுத்து, எட்வின் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து அங்கிருந்து தப்பினார்.

இதைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் அங்கு வந்தனர். அவர்களுடன் எட்வினும் தனக்கு எதுவுமே தெரியாததுபோல் நடித்து அங்கு வந்தார். பின்னர் படுகாயத்துடன் கிடந்த பெண்ணை மீட்டு உறுவினர்களுடன் எட்வினும் சேர்ந்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்.

மேலும் இதுகுறித்து புகாரளிக்க காவல்நிலையத்திற்கும் உறவினர்களுடன் சேர்ந்து எட்வினும் சென்றார். புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் எட்வின் தான் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, எட்வினை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற அந்தப்பெண் நாகர்கோவில் மருத்துகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, இந்த வழக்கை கொலை வழக்காக போலீசார் மாற்றியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Crime News, Kanniyakumari, Local News