ஹோம் /நியூஸ் /கன்னியாகுமரி /

மது அருந்தும்போது தகராறு.. கராத்தே கிக் விட்ட அண்ணன்... கத்தியால் குத்திய தம்பி- கன்னியாகுமரியில் பரபரப்பு

மது அருந்தும்போது தகராறு.. கராத்தே கிக் விட்ட அண்ணன்... கத்தியால் குத்திய தம்பி- கன்னியாகுமரியில் பரபரப்பு

மது போதையில் கொலை

மது போதையில் கொலை

கராத்தே பாணியில் அண்ணன் உதைத்துள்ளார். அதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ஜெயராஜ் உதட்டில் காயம் ஏற்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Kanniyakumari (Kanyakumari), India

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே, கராத்தே பிளாக் பெல்ட் அண்ணனை  காய்கறி நறுக்கும் கத்தியால்" மார்பில் குத்தி, கொலை செய்த  தம்பியை  போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே திட்டுவிளை ஜோசப் காலனி பகுதியை சேர்ந்தவர்  ஏசுதாஸ்(60) இவருக்கு மனைவி மற்றும்  3 மகன்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.  இரண்டாவது மகன் ஜார்ஜ் எடிசன் (42)  கராத்தே தற்காப்பு பயிற்சியில் பிளாக் பெல்ட் பெற்றவர். அவரது தம்பி  மார்டின் ஜெயராஜ்  (40)  கூலி வேலை செய்து வருகிறார்.

இவர்கள் இருவரும் திருமணமாகி  மனைவிகளை  வீட்டிலிருந்து விரட்டிய நிலையில் தாய் தந்தையுடன் வசித்து வருகின்றனர்.  அண்ணன் தம்பி இருவருமே கூட்டாக வீட்டிலிருந்து மது குடிக்கும் பழக்கம் உடையவர்கள். இந்நிலையில்,நேற்று இரவு  வீட்டில் இருவரும் சேர்ந்து அமர்ந்து  மது அருந்தியுள்ளனர்.

மது அருந்தும் போது இவர்களுக்குள்   ஏற்பட்ட வாய் தகராறில் ஒருவரை ஒருவர் கடுமையாக  தாக்கியுள்ளனர். இதில் கராத்தே பாணியில் அண்ணன் உதைத்துள்ளார். அதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ஜெயராஜ் உதட்டில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த  மார்டின் ஜெயராஜ் வீட்டில் இருந்த  காய்கறி நறுக்கும் கத்தியால் தனது சகோதரர்  ஜார்ஜ் எடிசனின் நெஞ்சில் பலமாக  குத்தியுள்ளார். கத்தி குத்தில் படுகாயமடைந்த எடிசன் மயங்கிய  நிலையில் விழுந்துள்ளார்.

இதையும் படிங்க: நடக்கும்போது கைப்பட்டு சரிந்த மைக்.. எம்.எல்.ஏ.வின் உதவியாளரை தாக்கிய அமைச்சர் நாசர்!

உடனடியாக  ஆம்புலன்ஸ்  வரவழைக்கப்பட்டு எடிசனை ஆசாரிபள்ளம்  மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளார் ஜெயராஜ். வரும் வழியில் ஆம்புலன்ஸ் டிரைவரிடம் "  அண்ணன் கீழ விழுந்து அடிபட்டதில் மயங்கிட்டாருனு சென்னால், போலீஸ் என்கிட்ட விசாரிப்பாங்களா" என்று சந்தேகம் எழுப்பியதால் இது தொடர்பாக ஆம்புலன்ஸ் டிரைவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் மருத்துவமனை வந்த போது  எடிசனைபரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து பூதப்பாண்டி  போலீசாரும் மருத்துவமனை  வந்த நிலையில்,  கத்தியால் குத்தி கொலை செய்த   ஜெயராஜை  கைது செய்து  விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்.

செய்தியாளர்: சரவணன் - நாகர்கோவில்

First published:

Tags: Crime News, Kanniyakumari