ஹோம் /நியூஸ் /கன்னியாகுமரி /

நடைபாதையை சேதப்படுத்தி அத்துமீறல்.. பெண் நூதன போராட்டம்

நடைபாதையை சேதப்படுத்தி அத்துமீறல்.. பெண் நூதன போராட்டம்

சாலையில் படுத்துறங்கி நூதன போராட்டம்

சாலையில் படுத்துறங்கி நூதன போராட்டம்

Kanniyakumari protest | கடந்த 30 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த பாதை திடீரென  உடைக்கபட்டதால் ஆத்திரத்தில் கேத்ரீனா நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kanniyakumari (Kanyakumari) | Kanniyakumari

கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் அருகே வீட்டிற்கு செல்லும் பாதையை தனிநபர் உடைத்ததால்  சாலையின் நடுவே கட்டிலுடன் படுத்து நூதனபோராட்டத்தில் பெண் ஒருவர் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் அற்றூர் அருகே  கோனான்விளை பகுதியை சேர்ந்த ஜார்ஜ் கேரளாவில் கூலி தொழிலாளியாக உள்ளார். இவரது மனைவி கேத்ரீனா (55). இவர்களது  வீட்டிற்கு செல்லும் சாலையை அப்பகுதியை சேர்ந்த  செல்லையன் என்பவரது மகன் ரத்தினதாஸ் (59)என்பவர் உடைத்துள்ளார்.

கடந்த 30ஆண்டுகளாக  பயன்படுத்தி வந்த பாதை திடீரென  உடைக்கபட்டதால் ஆத்திரத்தில் கேத்ரீனா தனது வீட்டிற்கு செல்லும் பாதையை மீட்க கோரி ஆற்றூர் காவின்குளம் சாலையின் நடுவே கட்டில் போட்டு படுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால்  அப்பகுதியில் வந்த வாகனங்கள் திரும்பி சென்றது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், பெண்ணுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து கேத்ரீனா போராட்டத்தை கைவிட்டார். பாதையை உடைத்த ரத்தினதாஸ் என்பவர் தனது மகன் காவல்துறையில் பணியில் இருப்பதை சுட்டிகாட்டி பொது சொத்துகளை ஆக்கிரமிப்பு செய்து வருவதாக அப்பகுதியினர் குற்றம்சாட்டினர். தொடர்ந்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

First published:

Tags: Kanniyakumari, Local News, Protest