ஹோம் /நியூஸ் /கன்னியாகுமரி /

துரத்தி துரத்தி அத்துமீறல்.. மினி பஸ் டிரைவர்களின் லவ் டார்சரால் 2 குழந்தைகளின் தாய் தற்கொலை

துரத்தி துரத்தி அத்துமீறல்.. மினி பஸ் டிரைவர்களின் லவ் டார்சரால் 2 குழந்தைகளின் தாய் தற்கொலை

பெண் தற்கொலை

பெண் தற்கொலை

சஜிலா வின் தற்கொலைக்கு மினிபஸ் டிரைவர்கள் கொடுத்த லவ் டார்ச்சர் தான் காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே இரண்டு குழந்தைகளின் தாயான பார்மசிஸ்ட் மினி பஸ் டிரைவர்களின் லவ் டார்சரால் தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில்குற்றவாளிகள் போலீசாரால் கைது செய்யப்படாத நிலையில் மினி பஸ் டிரைவர்கள் அவரை விரட்டி விரட்டி அவரிடம் அத்துமீறும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை அடுத்த காரியாவிளை பகுதியை சேர்ந்தவர் ஆனந்த குமார். இவரது மனைவி சஜிலா. இரண்டு குழந்தைகளுக்கு தாயான இவர் சுங்கான்கடை பகுதியில் உள்ள முத்து நீரோ என்ற தனியார் மருத்துவமனையில் பார்மசிஸ்ட் ஆக வேலை பார்த்து வருகிறார். கடந்த சனிக்கிழமை பணி முடிந்து வீட்டிற்கு வந்த அவர் 4-பக்க கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு வீட்டின் சமயலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து அங்கு சென்ற குளச்சல் போலீசார் தற்கொலை வழக்கு பதிவு செய்து அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு 4-பக்க கடிதத்தையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில் மினிபஸ் டிரைவர் துரோகம் செய்து விட்டதாகவும் ஐ மிஸ் யூ புருஷா என்றும் குழந்தைகள் குறித்தும் உருக்கமாக எழுதப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சஜிலா வின் தற்கொலைக்கு மினிபஸ் டிரைவர்கள் கொடுத்த லவ் டார்ச்சர் தான் காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டியும் போலீசார் அவர்கள் கைது செய்யாத நிலையில்

பணி முடிந்து வீடு திரும்பும் சஜிலாவை மினிபஸ் டிரைவர் சிபின் மற்றும் அவரது நண்பர் இருவருமாக திங்கள்நகர் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் விரட்டி விரட்டி தடுத்து நிறுத்தி அத்துமீறி லவ் டார்ச்சர் கொடுக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பிளஸ்2 மாணவன் தற்கொலையில் திருப்பம்... டியூசன் டீச்சர் உடன் காதல்.. வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயமானதால் விபரீத முடிவு

இதற்கிடையே குளச்சல் போலீசார் மினிபஸ் டிரைவர் சிபின் மீது தற்கொலைக்கு தூண்டியது , பெண்ணை பொது இடத்தில் மானபங்கம் செய்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்.

மேலும் மினிபஸ் டிரைவர் சிபின் உடன் கள்ள தொடர்பில் இருந்த இன்னொரு பெண் மூலம் தான் சஜிலா வின் மொபைல் எண் மினிபஸ் டிரைவர் சிபின் வாங்கி தொடர்ந்து டார்ச்சர் கொடுத்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மன அழுத்தம் ஏற்பட்டாலோதற்கொலை எண்ணம் உண்டானாலோஅதனை மாற்றகீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.

மாநில உதவி மையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

Published by:Murugesh M
First published:

Tags: Kanniyakumari, Suicide