ஹோம் /நியூஸ் /கன்னியாகுமரி /

கன்னியாகுமரியில் விளைந்த 6 அடி கிழங்கு.. ஆச்சரியமாக பார்த்து செல்லும் ஊர்மக்கள்!

கன்னியாகுமரியில் விளைந்த 6 அடி கிழங்கு.. ஆச்சரியமாக பார்த்து செல்லும் ஊர்மக்கள்!

6 அடி உயர கிழங்கு விளைச்சல்

6 அடி உயர கிழங்கு விளைச்சல்

Kanniyaakumari Unique Yam | 50 கிலோ எடையுள்ள இந்த அதிசிய கிழங்கை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kanniyakumari | Kanniyakumari

கன்னியாகுமரியில் விளைந்த 6 அடி உயர காய்ச்சில் கிழங்கை பொதுமக்கள் அதிசயமாக பார்த்து செல்கின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையை அடுத்த மாஞ்சாலுமூடு பகுதியை சேர்ந்தவர் பிரதீஷ். தனியார் பள்ளி ஆசிரியரான இவர் விடுமுறை நாட்களில் தனக்கு சொந்தமான நிலத்தில் பல அரிய வகை உணவு பொருட்களை பயரிட்டு வளர்த்து பராமரித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் காய்ச்சில் கிழங்கு வகை ஒன்றை பயரிட்டு வளர்த்து வந்த நிலையில் தற்போது அதனை மண்ணிற்கு அடியில் இருந்து தோண்டி எடுத்துள்ளார்.

சாதரணமாக இந்த கிழங்கு வகைகள் வட்ட வடிவில் சுமார் 5 ல் இருந்து 15 கிலோ வரை எடையில் வளரும் ஆனால் பிரதீஷ் நட்டிருந்த இந்த கிழங்கானது சுமார் 6 அரை அடி ஆள் உயரத்திற்கு மண்ணிற்கு அடியில் வளர்ந்து இருந்துள்ளது. இதனை கண்டு ஆச்சிரியம் அடைந்த பிரதீஷ் தனது நண்பர்கள் உதவியுடன் இந்த கிழங்கை உடைந்து விடாமல் பாதுகாப்பான முறையில் மண்ணிற்கு அடியில் இருந்து தோண்டி எடுத்துள்ளார்.

இந்த அதிசய கிழங்கை அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் நேரில் வந்து பார்வையிட்டு சென்று வருகின்றனர். இந்த கிழங்கின் எடை சுமார் 50 கிலோவுக்கு மேல் இருப்பதாக பிரதீஷ் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Agriculture, Kanniyakumari, Local News