Home /News /kanniyakumari /

ஓணம் பண்டிகையை முன்னிட்டு களைகட்டியது தோவாளை மலர் சந்தை...

ஓணம் பண்டிகையை முன்னிட்டு களைகட்டியது தோவாளை மலர் சந்தை...

தோவாளை மலர் சந்தை

தோவாளை மலர் சந்தை

Kanniyakumari | ஓணம் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் இரவு நேர ஓணச்சந்தை களைகட்டியது. மழை காரணமாக பூக்கள் வரத்து குறைந்ததால் விலை இரு மடங்கு உயர்ந்தது. மேலும் கேரள வியாபாரிகள் குவிந்ததால் அதிக அளவில் பூக்கள் விற்பனையும் நடைபெற்றது

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kanniyakumari, India
    தென் தமிழகத்தில் மிகவும் முக்கியமான  மலர் சந்தை குமரி மாவட்டம் தோவாளை பகுதியில் அமைந்துள்ளது. இங்கு தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுவது வழக்கம். பண்டிகை காலங்களில் அதிக அளவில் பூக்கள் இந்த சந்தைக்கு கொண்டு வந்து வியாபாரிகள் விற்பனை செய்து வருகிறார்கள்.

    கேரள மக்களின் வசந்த விழா என அழைக்கப்படும் திருவோணம் பண்டிகை  10 நாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில் வீடுகளில் மகாபலி சக்ரவர்த்தியை வரவேற்று அத்தப் பூ கோலங்கள் போடப்படுவது வழக்கம். இந்த கோலத்திற்கு பயன்படுத்தப்படும் பூக்கள் பெரும்பாலும் குமரி மாவட்டம் தோவாளையில் இருந்துதான் கொண்டு செல்லப்படுகிறது.

    இதற்காக டன் கணக்கில் பூக்களை கேரள வியாபாரிகள் வருடம் தோறும் வாங்கி செல்வது வழக்கம். அந்த வகையில் இரவு நேர சிறப்பு மலர் சந்தை தோவாளையில் கூடியது. ஓசூர், மதுரை, ஊட்டி உட்பட பல பகுதிகளில் இருந்து இங்கு பூக்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யபட்டு வருகிறது. தற்போது பல பகுதிகளில் மழை பெய்து வருவதால் பூக்கள் வரத்து என்பது குறைந்துள்ளது.

    Also see... தொட‌ர் ம‌ழையால் கொடைக்கானலில் ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகள்

    இதன் காரணமாக பூக்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.4,000க்கும் பிச்சிப்பூ ஒரு கிலோ ரூ. 2000கும், சேலம் அரளி, சம்பங்கி, ரோஜா ஆகியவை சராசரியாக கிலோ ரூ.400க்கும், கனகரம்பரம் ஒரு கிலோ ரூ. 2,000க்கும் விற்கப்படுகிறது. ஓணம் பண்டிகைக்காக பூக்கள் தேவை அதிகரித்துள்ள காரணத்தால் கேரள வியாபாரிகள் , மற்றும் கேரள மக்கள் அதிக அளவில் இரவு நேர மலர் சந்தைக்கு வந்து பூக்களை வாங்கி செல்கின்றனர். இதனால் தோவாளை பூ சந்தை களைகட்டியது.

    செய்தியாளர்: ஐ.சரவணன், நாகர்கோவில்   
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Flower Carpet, Kanniyakumari Constituency, Kerala, Onam

    அடுத்த செய்தி