கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக நடைபெற்று வரும் வரலாற்று சிறப்பு வாய்ந்த சிவாலய ஓட்டத்தை பார்க்க பக்தர்கள் குவிந்தனர்.
மகாசிவராத்திரி தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க சிவாலய ஓட்டம் நேற்று தொடங்கியது. சிவராத்திரி தினமான இன்று இரண்டாவது நாளாக வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சகணக்கான பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர்.
ஆண்டுதோறும் மகாசிவராத்திரியன்று காவி ஆடை அணிந்து, கையில் விசிறியோடு குமரி மாவட்டத்தில் உள்ள திருமலைக்கோவிலில் தொடங்கி திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, பன்னிப்பாகம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருப்பன்றிக்கோடு, திருநட்டாலம் உள்ளிட்ட 12 சிவஸ்தலங்களுக்கும் முறையாக ஓடிச்சென்று சிவபிரானைத் தரிசிப்பார்கள்.
இந்த 12 சிவாலயங்களையும் ஓடி ஓடி தரிசிப்பதே ‘சிவாலய ஓட்டம் ’ என கூறப்படுகிறது. இந்த ஓட்டத்தின் மொத்த தூரம் 108 கி.மீ ஓடும்போது பக்தர்கள் கோவிந்தா, கோபாலா என்று விஷ்ணு நாமத்தை ஜபிக்கிறார்கள். ஹரியும் சிவனும் ஒண்ணு என்ற தத்துவத்தை உணர்த்தவே இந்த சிவாலய ஓட்டம் என அப்பகுதியினர் கூறுகின்றனர்.
6000 ஆண்டுகளாக இந்த சிவாலய ஓட்டம் நிகழ்ந்து வருவதாக கூறும் பக்தர்கள், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இந்த 12 சிவாலயங்களில் மஹாசிவராத்திரி தினத்தன்று இந்த சிவாலய ஓட்டத்தை மேற்கொள்ளும் பக்தர்கள் மாசி மாதம் கிருஷ்ண பட்ச ஏகாதசி அன்று மாலை அணிந்து அன்றிலிருந்து விரதம் இருப்பார்கள், சிவராத்திரிக்கு முன்தினம் காலையில் இருந்து எதுவும் சாப்பிடாமல் காவி அல்லது மஞ்சள் உடை அணிந்து புறப்படுவார்கள்.
சிவராத்திரியை முன்னிட்டு இன்று குமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை திருமலை கோவிலில் இருந்து தொடங்கிய சிவாலய ஓட்டம் இன்று இரண்டாவது நாளாக நடைபெற்று வரும் நிலையில் நாளை காலை வரையிலும் இந்த 12 கோவில்களில் இந்த நிகழ்வானது தொடர்ந்து நடைபெறும்.
இந்த நிலையில் தமிழகம், கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து வாகனகங்களில் வருபவர்கள் உட்பட லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த சிவாலய தரிசனத்தில் பங்கேற்பார்கள் என்பதால் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு சுமார் 1,500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kanniyakumari, Local News, Maha Shivaratri