Home /News /kanniyakumari /

தேர்வடம் பிடிக்க அமைச்சருக்கு எதிர்ப்பு.. பாஜக எம்.எல்.ஏ. உட்பட 100 பேர் கைது

தேர்வடம் பிடிக்க அமைச்சருக்கு எதிர்ப்பு.. பாஜக எம்.எல்.ஏ. உட்பட 100 பேர் கைது

மனோ தங்கராஜுக்கு எதிராக போராட்டம்

மனோ தங்கராஜுக்கு எதிராக போராட்டம்

தேர் திருவிழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ் தேரை வடம் பிடித்து இழுத்து தேர் திருவிழாவை தொடங்கி வைக்க இருந்த நிலையில் அதற்கு மாற்று மத சிந்தனையுடைய அமைச்சர் மனோ தங்கராஜ் தேரை வடம் பிடித்து இழுக்கக் கூடாது என கூறி பாஜவினர் மற்றும் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் படிக்கவும் ...
கன்னியாகுமரி மாவட்டம் குமரா கோயில் முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழாவை ஒட்டி இன்று தேர் திருவிழா நடைபெற்றது. இதில் தேர் வடம் பிடித்து இழுக்க அமைச்சர் மனோ தங்கராஜ்க்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள வேளிமலையில் அமைந்துள்ளது தமிழக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குமாரகோயில் முருகன் கோயில்.
இந்த கோயிலில்  ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாக திருவிழா தேரோட்டத்துடன் நடைபெறுவது வழக்கம்
இந்த வருட வைகாசி விசாக திருவிழா தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இன்று தேரோட்ட திருவிழா நடைபெற்றது.

தேர் திருவிழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ் தேரை வடம் பிடித்து இழுத்து தேர் திருவிழாவை தொடங்கி வைக்க இருந்த நிலையில் அதற்கு மாற்று மத சிந்தனையுடைய அமைச்சர் மனோ தங்கராஜ் தேரை வடம் பிடித்து இழுக்கக் கூடாது என கூறி பாஜவினர் மற்றும் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மாவட்ட எஸ்பி தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

 மேலும் படிக்க: கோவையில் இருந்து சீரடிக்கு தனியார் ரயில்... கட்டண கொள்ளை: சு.வெங்கடேஷன் எம்.பி. கண்டனம்

பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் தேரை வடம் பிடித்து இழுத்து தேர் திருவிழாவை தொடங்கி வைத்தனர்.  இதற்கு எம்எல்ஏ எம்.ஆர்.காந்தி மற்றும் அர்ஜூன் சம்பத் தலைமையில் பாஜகவினர் எதிர் கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர். இதில் பக்தர்கள் போலீசாரிடையே கடும் வாக்குவாதம் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

பாஜக வினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் பாஜக எம்எல்ஏ எம்.ஆர்.காந்தி உட்பட 100-க்கும் மேற்பட்டோரை பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது
Published by:Murugesh M
First published:

Tags: BJP, Kanniyakumari, Police arrested

அடுத்த செய்தி