ஹோம் /நியூஸ் /கன்னியாகுமரி /

பெத்த மகன் கிட்ட பணம் காசா கேட்டேன்.. படுத்துக்க இடம்தானே கேட்குறேன் - கண்ணீர் வடிக்கும் முதியவர்

பெத்த மகன் கிட்ட பணம் காசா கேட்டேன்.. படுத்துக்க இடம்தானே கேட்குறேன் - கண்ணீர் வடிக்கும் முதியவர்

கன்னியாகுமரி

கன்னியாகுமரி

Kanniyakumari News | சொத்துக்களை பிரித்து கொடுத்த பின்னரும் தந்தை தங்கியிருந்த இடத்தை அபகரித்து தாக்கிய மகனின் காவல்துறையினர் விசாரணை

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Kanniyakumari, India

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் அருகே சொத்தை அபகரித்து கொண்டு பொருட்களை தூக்கி வீசி பெற்றோரை வீட்டை விட்டு அடித்து மகன் துரத்தியதாக தந்தை ஒருவர் உருக்கமாக பேசும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் நகர் அருகே செட்டியார் மடம் பகுதியை சேர்ந்தவர் ராஜையன் (வயது 89). விவசாய கூலி தொழிலாளியான இவருக்கு மனைவி இரண்டு மகன்கள் இரண்டு மகள்கள் உள்ளனர். மகன்கள் மற்றும் மகள்களுக்கு திருமணமான நிலையில் ராஜையன் தனது சொத்துக்களை பிள்ளைகளுக்கு பிரித்து கொடுத்து விட்டு தன் பெயரில் உள்ள சிறிய இடத்தில் அறை ஒன்றை கட்டி தனது 85 வயதான மனைவி ராஜம்மாளுடன் வாழ்க்கை நடத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில் தனியார் கம்பெனியில் மேலாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்ற அவரது மூத்த மகன் பால்தாஸ் என்பவர் பெற்றோரிடம் பேசி அவர்கள் வசித்து வந்த சிறிய அறை மற்றும் அந்த இடத்தை தன் பெயருக்கு பத்திர பதிவு செய்துள்ளார். நேற்று மாலை தனது மனைவியுடன் பெற்றோரின் அந்த வீட்டிற்கு வந்த பால்தாஸ் வீட்டின் முன்பக்க இருப்பு கேட்டை மற்றும் வீட்டில் இருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கி தூக்கி வெளியே வீசியதோடு தனது தந்தை ராஜையன் மற்றும் தாய் தங்கம்மாளையும் அடித்து உதைத்து வெளியேற்றி உள்ளார்.

இதில் காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக குளச்சல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் புகாரின் அடிப்படையில் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராஜையன் நலம் விசாரிக்க சென்றவர்களிடம் பேசியுள்ளார்.

அந்த வீடியோவில் பெத்து வளர்த்த நாங்கள் இவ்வளவு வயசு வரை வளர்த்ததுக்கு 89-வயதுல பிடித்து தள்ளி என்னை இந்த மாதிரி அநியாயம் செய்கிறான். பணம் காசே வேண்டாம்பா ஒதுங்கி படுத்துக்கிறேன் அப்பா ரூபாயே தர வேண்டாம் என் சொத்து  எல்லம் என் காலத்திற்கு பிறகு உனக்குத்தான் என சட்டை கிழிந்த கோலத்தில் ஆதங்கத்தோடு உருக்கமாக பேசும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Crime News, Kanniyakumari, Local News