ஹோம் /நியூஸ் /கன்னியாகுமரி /

ரியல் சதுரங்க வேட்டை... பல லட்சம் ரொக்கப்பணத்துடன் போலீசில் சிக்கிய மோசடி கும்பல்!

ரியல் சதுரங்க வேட்டை... பல லட்சம் ரொக்கப்பணத்துடன் போலீசில் சிக்கிய மோசடி கும்பல்!

ரியல் சதுரங்க வேட்டை... பல லட்சம் ரொக்கப்பணத்துடன் போலீசில் சிக்கிய மோசடி கும்பல்!

பலரிடம் ஆசையைத் தூண்டும் வகையில் பேசி தனது மோசடி வலையில் சிக்க வைத்து வசூல் வேட்டையில் ஈடுபட்டது தெரியவந்தது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Kanniyakumari (Kanyakumari), India

  10 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் 3 மாதத்தில் 50 ஆயிரம் ரூபாய் தருவதாக கூறி மோசடி பண வசூலில் கும்பல் ஒன்று ஈடுபட்டுள்ளது. போலீசாரின் திடீர் சோதனையில் பல லட்ச ரூபாய் ரொக்க பணத்துடன் அந்த கும்பல் சிக்கியுள்ளது.

  கன்னியாகுமரி வடக்கு குண்டல் பகுதியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் கடந்த 30-ந் தேதி 2 பெண்கள் உள்பட 8 பேர் கொண்ட கும்பல் சில அறைகளை எடுத்து தங்கியது. அவர்களை சந்திப்பதற்காக பலரும் கார்களில் விடுதிக்கு வந்து சென்ற வண்ணம் இருந்தனர். அவர்கள் பெரிய பெரிய பெட்டிகளுடன் வந்ததால் அப்பகுதியே பரபரப்பானது.

  சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் விடுதிக்குள் நுழைவதைப் பார்த்ததும் சிலர் அங்கிருந்து தப்பியோடினர். மற்றவர்களைப் பிடித்து போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் அவர்கள் பண இரட்டிப்பு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. விடுதியில் தங்கியிருந்த 2 பெண்கள் உட்பட 8 பேரை போலீசார் பிடித்தனர்.

  இந்த பணமோசடி திட்டத்திற்கு மதுரை பேரையூர் பகுதியைச் சேர்ந்த சுந்தரபாண்டியன் என்பவர் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. சுந்தரபாண்டியன் தன்னிடம் 10 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் 3 மாதம் கழித்து 5 மடங்காக திருப்பித் தருவதாகக் கூறி சுற்றுவட்டார பகுதி மக்களிடம் விளம்பரம் செய்துள்ளார்.

  Read More : பரமக்குடியில் நாய் கடித்து குதறியதால் உயிருக்கு போராடிய புள்ளிமான்... பொதுமக்கள் மீட்டு சிகிச்சை...

  மேலும் ஏஜெண்டுகளை நியமித்து வாக்குறுதிகளை வாரி வழங்கியதால் 25க்கும் மேற்பட்டோர் இவரைப் பார்க்க பணத்துடன் நாகர்கோவில் விடுதிக்கு வந்துள்ளனர். விடுதி அறையில் சோதனை செய்ததில் 10க்கும் மேற்பட்ட செல்போன்கள், லேப்டாப், மோசடி ஆவணங்கள் மற்றும் 11 லட்சம் ரொக்கம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

  பிடிபட்ட 8 பேரிடமும் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. சுந்தரபாண்டியன் மதுரை திருமங்கலம் பகுதியில் ஹோட்டல் ஒன்றில் சர்வராக வேலை பார்த்து வந்துள்ளார். அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசையில் ரைஸ்புல்லிங் என்னும் இரிடியம் மோசடி கும்பலிடம் பணத்தைக் கொடுத்து ஏமாந்துள்ளார்.

  விரக்தியில் சுற்றித்திரிந்து வந்த சுந்தரபாண்டியன் சதுரங்க வேட்டை படப்பாணியில்தான் ஏமாற்றப்பட்டது போலவே மற்றவர்களை ஏமாற்ற முடிவு செய்தார். அதன்படி தன்னை தொழிலதிபரைப் போலக் காட்டிக் கொண்டு மோசடியை அரங்கேற்ற ஆரம்பித்தார்.

  பவுன்சர்கள் அமர்த்திக் கொண்டும், அழகான இளம் பெண்களை உதவியாளர்களாக நியமித்துக் கொண்டும் உயர்ரக கார்களில் வலம் வந்துள்ளார். பலரிடம் ஆசையைத் தூண்டும் வகையில் பேசி தனது மோசடி வலையில் சிக்க வைத்து வசூல் வேட்டையில் ஈடுபட்டது தெரியவந்தது.

  பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்ற பழமொழிக்கேற்ப தற்போது மோசடி மன்னன் சுந்தரபாண்டியன் போலீசார் வலையில் சிக்கியுள்ளார். இதுவரை இந்த கும்பலை சேர்ந்த 17 பேரை பிடித்துள்ள போலீசார் அவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Kanniyakumari