முகப்பு /செய்தி /கன்னியாகுமரி / கன்னியாகுமரியில் வரும் 14ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

கன்னியாகுமரியில் வரும் 14ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

கன்னியாகுமரி

கன்னியாகுமரி

Kanniyakumari local holiday | பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanniyakumari (Kanyakumari), India

கன்னியாகுமரியில் வரும் 14 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டதில் உலக பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் மாசி கொடை விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான திருவிழா வரும் 14ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த திருவிழாவையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மட்டும் ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.

14.03.2023 அன்று அறிவிக்கப்பட உள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 2023 மே திங்கள் இரண்டாவது சனிக்கிழமை (13.05.2023) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்படி உள்ளூர் விடுமுறை அளிக்கும் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Festival, Holiday, Kanniyakumari, Local News, School Leave