ஹோம் /நியூஸ் /கன்னியாகுமரி /

வைக்கோல் கட்டுக்குள் மறைத்து வைத்து 500 கிலோ குட்கா கடத்தல்! - வாகன சோதனையில் சிக்கிய மினி டெம்போ!

வைக்கோல் கட்டுக்குள் மறைத்து வைத்து 500 கிலோ குட்கா கடத்தல்! - வாகன சோதனையில் சிக்கிய மினி டெம்போ!

குட்கா பறிமுதல்

குட்கா பறிமுதல்

Kanniyakumari Gutka  seized Case | வைக்கோல் கட்டுகளுக்கு இடையே மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kanniyakumari, India

பெங்களூரில் இருந்து கன்னியாகுமரிக்கு சட்ட விரோதமாக வைக்கோல் கட்டுகளுக்கிடையே மறைத்து வைத்து கடத்திவரப்பட்ட ரூ.6 லட்சம் ரூபாய் மதிப்பிலான 500 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா மற்றும் பல்வேறு வகையான போதை பொருட்களை தடை செய்யப்பட்டுள்ளதால் அண்டை மாநிலமான கர்நாடகாவில் இந்த போதை பொருட்கள் சட்டவிரோதமாக தமிழகத்திற்கு கடத்தி வரப்படுகிறது.  இதனை பலரும் குறைந்த விலைக்கு வாங்கி தமிழகம் கடத்தி வந்து  சட்டவிரோதமாக விற்பனை செய்து வருகின்றனர். இந்த கடத்தலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் ஆரால்வாய்மொழி அருகே உள்ள திருநெல்வேலி - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினி டெம்போ வை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் வைக்கோல் கட்டுகளுக்கு இடையே மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், 500 கிலோ புகையிலை பொருட்கள் பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.  மேலும் இதன் மதிப்பு சுமார்  ரூ.6 லட்சம்  ரூபாய்  என்ற நிலையில் மினி டெம்போ மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் , கடத்தலில் ஈடுபட்ட   திண்டுக்கல் மாவட்டம் பழனி  பகுதியை சேர்ந்த ஓட்டுநர் பீர் முகமது (39) என்பவரை கைது செய்தனர். மேலும் இது குறித்து  அவரிடம் ஆரல்வாய்மொழி போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் : ஐ.சரவணன்   

First published:

Tags: Kanniyakumari, Local News