ஹோம் /நியூஸ் /கன்னியாகுமரி /

பங்களாவில் மகன்.. குப்பைக்குள் தனியாக போராடிய 80வயது தாய்.. மனதை உருக்கும் சம்பவம்!

பங்களாவில் மகன்.. குப்பைக்குள் தனியாக போராடிய 80வயது தாய்.. மனதை உருக்கும் சம்பவம்!

உயிருக்கு போராடி கொண்டிருந்த மூதாட்டி மீட்பு

உயிருக்கு போராடி கொண்டிருந்த மூதாட்டி மீட்பு

Kanniyakumari | மனைவியின் பேச்சை கேட்டு உடல் நலம் குன்றிய தாயை பாழடைந்த வீட்டில் விட்டு சென்றுள்ளார் மகன்.

  • Local18
  • 2 minute read
  • Last Updated :
  • Kanniyakumari (Kanyakumari) | Kanniyakumari

கன்னியாகுமரியில் பாழடைந்த வீட்டில் இருட்டுக்குள் ஆதரவின்றி உயிருக்கு போராடி கொண்டிருந்த மூதாட்டியை அப்பகுதி இளைஞர்கள் சேர்ந்து மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் பேருந்து நிலையம் அருகே பாடுவான்விளை பகுதியில் ஒரு பாழடைந்த வீட்டில் இருட்டில் குப்பை கூழங்களுக்கு இடையே 80-வயது மூதாட்டி ஒருவர் படுத்த படுக்கையாக உயிருக்கு போராடியபடி கிடந்துள்ளார்.

இதை அறிந்த இளைஞர்கள் சிலர் உயிருக்கு போராடி கொண்டிருந்த மூதாட்டியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அந்த மூதாட்டி அதே பகுதியை சேர்ந்த 80 வயதான கித்தேரி அம்மாள் என்பதும் 34 வருடங்களுக்கு முன் கணவன் செல்லையன் இறந்த நிலையில் 55 வயதான ஒரே மகன் செல்வராஜ் ஐ வீட்டு வேலைகளுக்கு சென்று அதில் கிடைக்கும் ஊதியத்தில் படிக்க வைத்து வளர்த்து ஆளாக்கி திருமணம் செய்து வைத்ததும் தெரியவந்தது.

இதையும் படிங்க | கிட்னியை விற்க முயன்று 16 லட்சத்தை கோட்டை விட்ட மாணவி..!

பிறகு மகன் செல்வராஜ் மனைவியின் பேச்சை கேட்டு தாயின் வீடு, நிலங்களை விற்பனை செய்து லட்சக்கணக்கான பணத்தை எடுத்து கொண்டு திங்கள்நகர் பகுதியில் பங்களா வீடு கட்டி தனியாக மனைவி இரண்டு மகன்களுடன் சொகுசாக வசிப்பதோடு தாய் கித்தேரி அம்மாளை பாழடைந்த சிமெண்ட் கொட்டகையில் தவிக்க விட்டு சென்றதும் தெரியவந்தது.

இதனை கண்டு மனம் தளராத கித்தேரி அம்மாள் தள்ளாடும் வயதிலும் கடந்த 5 ஆண்டுகளாக தொருவோரம் கிடக்கும் இரும்பு பிளாஸ்டிக் குப்பைகளை விற்பனை செய்து அதில் கிடைக்கும் பணத்தில் தனது வாழ்க்கை போராட்டத்தை நடத்தியுள்ளார்.

இந்த நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மூதாட்டியின் கால்கள் இரண்டும் செயலிழந்த நிலையில், பாழடைந்த வீட்டில் குப்பைகளுக்கு இடையே படுத்த படுக்கையாகி முடங்கியுள்ளார். இவருக்கு அப்பகுதியை சேர்ந்த சிலர் கடந்த 6 மாதங்களாக உணவளித்து வந்துள்ளனர்.

இதையும் படிங்க | கன்னியாகுமரியில் பார்த்து ரசிக்க வேண்டிய பிரமிப்பூட்டும் அழகான சுற்றுலா தலம் - மாத்தூர் தொட்டிப்பாலம்

இதனையடுத்து போலீசார் மகன் செல்வராஜை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் தன் தாய் கொலை செய்ய முயற்சித்ததாகவும், அதனால் தான் வீடு நிலங்களை விட்டு தனியாக விட்டு சென்றதாகவும் கூறியுள்ளார். மேலும், தாய் தனக்கு எதுவும் செய்யவில்லை, அதனால் தான் நானும் அவருக்கு எதுவும் செய்யவில்லை என கூறியுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், மகனை எச்சரித்து, விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

First published:

Tags: Kanniyakumari, Local News