ஹோம் /நியூஸ் /கன்னியாகுமரி /

சிதறிக்கிடந்த மனித எலும்புக்கூடுகள்.. கடித்துக்குதறிய நாய்கள்.. கன்னியாகுமரியில் பகீர் சம்பவம்!

சிதறிக்கிடந்த மனித எலும்புக்கூடுகள்.. கடித்துக்குதறிய நாய்கள்.. கன்னியாகுமரியில் பகீர் சம்பவம்!

கொலை செய்யப்பட்டவர்

கொலை செய்யப்பட்டவர்

தொடர்ந்து பல நாட்கள் ஆகியதால் அழுகிய நிலையில் கிடந்த மாசானத்தின் சடலத்தை, அப்பகுதியில் இருந்த நாய்கள் கடித்து குதறி இழுத்து சென்றுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Kanniyakumari (Kanyakumari) | Kanniyakumari

  கன்னியாகுமரி அருகே கடந்த மாதம் மாயமான மாசானம் என்ற நபர், சிதறிய எலும்பு கூடாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம்  ஆசிரமம் பகுதி அருகே பழையாற்றின் குறுக்கே சோழன்திட்டை தடுப்பணை உள்ளது . அப்பகுதியில் பழையாறு கரையோரமாக  புதர் மண்டிய இடத்தில் மனித எலும்புக்கூடுகள் சிதறி கிடப்பதாக தகவல் பரவியது.  சம்பவ இடத்திற்கு சென்ற சுசீந்திரம் போலீசார் கைரேகை மற்றும் தடவியல் நிபுணர்களை வரவழைத்து அப்பகுதியில் சிதறிகிடந்த  எலும்புக்கூடுகளை சேகரித்து விசாரணை மேற்கொண்டனர்.

  இந்நிலையில், தனிப்படை போலீசாரின் விசாரணையில் எலும்புக்கூடாக  காணப்பட்டவர் கடந்த ஒரு மாதம் முன்பு காணாமல் போன மாசானம்  என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

  அத்துடன் அவரை இரண்டு நண்பர்கள் இணைந்து கொலை செய்து வீசி சென்றுள்ளதும் தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து கன்னியாகுமரி போலீசார் மாதவபுரம் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மற்றும் விக்னேஷ் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

  இதையும் படிங்க | குளிர்பானத்தில் ஆசிட் கலந்து கொடுத்த சக மாணவன்: செயலிழந்த சிறுநீரகங்களுடன் உயிருக்கு போராடிய சிறுவன் உயிரிழப்பு...

  விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன் பாலகிருஷ்ணன் வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்க பட்டுள்ளது. இது தொடர்பாக கன்னியாகுமரி காவல்நிலையத்தில்  பாலகிருஷ்ணன் புகார் அளித்துள்ளார்.  இந்நிலையில் கடந்த மாதம் மது போதையில் இருந்த மாசானம், பாலகிருஷ்ணனிடம் உனது வீட்டில் இருந்து பொருட்கள் திருடியது நான் தான் என கூறியுள்ளான். இதனை மனதில் வைத்துக்கொண்ட பாலகிருஷ்ணன், இது தொடர்பாக நண்பர் விக்னேஷ் என்பவரிடம் கூறியுள்ளார். இருவரும் இணைந்து மாசானத்தை வரவழைத்து அடி கொடுத்து வேறு எங்கெல்லாம் திருடியுள்ளான் என்பதையும், தனது வீட்டில் திருடியது தொடர்பாக கேட்கவும் திட்டமிட்டுள்ளனர்.

  அதன் படி கடந்த மாதம் 18 ம் தேதி  ஒரே இருசக்கர வாகனத்தில் மூன்று பேரும் மது பாட்டில்கள்  வாங்கி கொண்டு சுசீந்திரம் ஆஸ்ரமம் பகுதியில் சோழத்திட்டை அணைப்பகுதியில்  ஆள் நடமாட்டம் இல்லாத மயானம் அமைந்துள்ள பகுதியில் நின்று மது அருந்தியுள்ளனர். மது போதையில்  மாசானத்திடம் கொள்ளை சம்பவம் குறித்து கேட்ட நிலையில் இருவரும் இணைந்து மாசானத்தை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த மாசானம் அதே பகுதியில் மயக்கமடைந்துள்ளார். இதனை கண்ட பாலகிருஷ்ணன் மற்றும் விக்னேஷ் மாசானத்தை அப்படியே விட்டு விட்டு இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

  இந்நிலையில் மாசானம் சிறுது நேரத்தில் அதே பகுதியில்  உயிரிழந்துள்ளார். தொடர்ந்து பல நாட்கள் ஆகியதால் அழுகிய நிலையில் கிடந்த மாசானத்தின் சடலத்தை, அப்பகுதியில் இருந்த நாய்கள் கடித்து குதறி இழுத்து சென்றுள்ளது. இதனால் ஆங்காங்கே அவரது சடலத்தில் எலும்பு கூடுகள் சிதறியுள்ளது தெரியவந்தது.

  செய்தியாளர்: ஐ.சரவணன், நாகர்கோவில்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Crime News, Kanniyakumari, Murder