முகப்பு /செய்தி /கன்னியாகுமரி / முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு... கன்னியாகுமரி மாவட்ட பாஜக கவுன்சிலர் கைது!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு... கன்னியாகுமரி மாவட்ட பாஜக கவுன்சிலர் கைது!

கைதானவர்

கைதானவர்

Kanniyakumari News : முதலமைச்சர் குறித்து அவதூறு பரப்பிய கன்னியாகுமரி மாவட்ட பாஜக கவுன்சிலர் கைது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanniyakumari, India

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து சமூக வலைதளத்தில்   அவதூறு பரப்பியதாக கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைக்குளம் பேரூராட்சி பாஜக கவுன்சிலர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கன்னியாகுமரி மாவட்டம் தென் தாமரைகுளம் பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் சுயம்பு. இவர் பாஜக ஐடி பிரிவில் மாவட்ட துணை தலைவராக உள்ளார். மேலும் தென் தாமரை குளம் பேரூராட்சி வார்டு கவுன்சிலராகவும் உள்ளார். இவர் கடந்த 2 தினங்களுக்கு முன் தனது முகநூல் பக்கத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், திமுக வழக்கறிஞர் சிவ கோடீஸ்வரன் என்பவர் இதுகுறித்து காவல்நிலையத்தில் அளித்த புகாரளித்தார். அந்த புகாரில், “இரு பிரிவினர் இடையே கலவரத்தை தூண்டும் வகையிலும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாகவும் கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைக்குளம் பேரூராட்சி பாஜக கவுன்சிலர் சுபாஷ் சுயம்பு ஒரு வீடியோவை  பதிவு செய்துள்ளார். எனவே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பரப்பிய அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” என கூறியிருந்தார்.

இதையடுத்து, சைபர் கிரைம் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியது தெரியவந்தது. இதையடுத்து, பாஜக நிர்வாகி சுபாஷ் சுயம்பு மீது  153 a , 505 (1) , 506(2) , 504  , 295 a உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

செய்தியாளர் : சரவணன் - நாகர்கோவில்

First published:

Tags: Crime News, Kanniyakumari, Local News