ஹோம் /நியூஸ் /கன்னியாகுமரி /

கணவனை பிரிந்த இளம் பெண்கள்தான் குறி... திருமண ஆசைக்காட்டி நகைகளை மோசடி செய்த கன்னியாகுமரி இளைஞர்!

கணவனை பிரிந்த இளம் பெண்கள்தான் குறி... திருமண ஆசைக்காட்டி நகைகளை மோசடி செய்த கன்னியாகுமரி இளைஞர்!

மோசடி

மோசடி

Kanniyakumari Cheating case | கன்னியாகுமரியில் திருமணமான பெண்களை மட்டும் குறி வைத்து ராஜு என்பவர் மோசடியில் ஈடுபட்டு வருவதாக புகார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kanniyakumari (Kanyakumari) | Kanniyakumari

கன்னியாகுமரி மாவட்டத்தில், திருமணம் செய்வதாக கூறி ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி விட்டதாக ஒரே இளைஞர் மீது இரண்டு பெண்கள் புகார் அளித்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில், திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக ஒரே இளைஞர் மீது இரண்டு பெண்கள் புகார் அளித்துள்ளனர். குழித்துறை அருகே உள்ள பாலவிளையைச் சேர்ந்த சோபியா என்பவரும், குளச்சல் பகுதியைச் சேர்ந்த பிரின்ஸி என்பவரும், அருமனையைச் சேர்ந்த ராஜு என்பவர் மீது புகார் அளித்துள்ளனர்.

இந்த இரு பெண்களும் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து, இரு குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார்கள். குமரியில் பல பெண்களை ஏமாற்றிய நாகர்கோவில் காசி என்பவர், போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில், கணவனை பிரிந்து வாழும் பெண்களைக் குறிவைத்து பணம், நகைகளை வாங்கி மோசடி செய்ததாக ராஜு மீது புகார்கள் வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ராஜூவை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

First published:

Tags: Cheating case, Crime News, Kanniyakumari, Sexual abuse