கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே 62 வயதில் கரம் பிடித்த இந்தோனேஷிய காதலியை அவரது குடும்பத்தினரை வீட்டின் அறையில் பூட்டி சிறை வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள பருத்திவிளை பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்டோபர். 62 வயதான இவர் திருமணம் ஆகாத நிலையில் தனது தாயாருடன் குடும்பமாக வீட்டில் வசித்து வந்ததோடு வீடு வீடாக சென்று கிறஸ்தவ மத போதனைகளிலும் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் தாயார் இறந்த நிலையில் தனிமையில் வாழ்ந்து வந்த இவருக்கு முகநூல் மூலம் இந்தோனேசியாவை சேர்ந்த திபோரா என்ற இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
முகநூல் வழியாக திபோராவிடம் அடிக்கடி மத போதனையில் ஈடுபட்ட கிறிஸ்டோபர் ஒரு கட்டத்தில் அந்த இளம்பெண்ணை காதலிக்க தொடங்கியுள்ளார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 21-ம் தேதி இந்தோனேசிய இளம்பெண் திபோராவை நாகர்கோவில் அழைத்து வந்த கிறிஸ்டோபர், நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்தில் வைத்து திருமணம் செய்து வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். வயது கடந்த இந்த திருமணத்திற்கு சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்றிரவு கிறிஸ்டோபர், மனைவி திபோராவிற்கு உணவு வாங்குவதற்காக வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அந்த நேரம் அவரது உறவினர்கள் திபோராவை வீட்டின் அறையில் பூட்டி சிறை வைத்ததோடு வெளியே சென்ற கிறிஸ்டோபர் வீட்டிற்கு உள்ளே வரமுடியாத அளவில் கதவுகளை பூட்டி வைத்துள்ளனர். இதனால் அச்சமடைந்த கிறிஸ்டோபர் போலீசாரை தொடர்பு கொண்டுள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கிறிஸ்டோபரின் சகோதரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போது அவர்கள் இந்தோனேசிய இளம்பெண் திபோராவை வெளியே விட மறுத்ததோடு கிறிஸ்டோபரையும் வீட்டிற்கு உள்ளே அனுமதிக்க மறுத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நள்ளிரவு சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்ட நிலையில்
போலீசார் தொடர்ந்து இரு தரப்பினருடருனும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையும் படிங்க: ஷேர் ஷாட்டில் பழக்கம்.. தனிமையில் உல்லாசம் - காதலித்து ஏமாற்றிய ராணுவ வீரரின் திருமணத்தை நிறுத்திய காதலி
சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாகியும் உடன்பாடு எட்டப்படாததால் ஒரு கட்டத்தில் போலீசார் கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே செல்ல நேரிடும் என எச்சரித்த நிலையில்
கிறிஸ்டோபரின் சகோதரர்கள் கேட்டை திறந்து போலீசாரின் விசாரணைக்கு சம்மதித்தனர். இதனையடுத்து போலீசார் கிறிஸ்டோபரை வீட்டிற்கு அனுப்பி வைத்ததோடு இரு தரப்பினரும் காலை 10-மணிக்கு குளச்சல் காவல் நிலையத்தில் ஆஜராகும் படி கூறி பாதுகாப்பிற்காக சில போலீசாரை அங்கு நிறுத்திவிட்டு சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kanniyakumari, Local News, Marriage