ஹோம் /நியூஸ் /கன்னியாகுமரி /

பிச்சைக்காரரை செருப்பால் அடித்த நகைக்கடைக்காரர்... பரபரப்பை ஏற்படுத்திய பகீர் வீடியோ!

பிச்சைக்காரரை செருப்பால் அடித்த நகைக்கடைக்காரர்... பரபரப்பை ஏற்படுத்திய பகீர் வீடியோ!

முதியவரை தாக்கும் சிசிடிவி காட்சிகள்

முதியவரை தாக்கும் சிசிடிவி காட்சிகள்

Kanniyakumari News : கன்னியாகுமரியில் வயதான பிச்சைக்காரர் ஒருவரை நகைக்கடை உரிமையாளர் ஒருவர் காலணியால் தாக்கும் கொடூர  சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kanniyakumari, India

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் நகைக்கடை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு வயதான பிச்சைக்காரர் ஒருவர் யாசகம் கேட்டு சென்றுள்ளார்.

அப்போது திடீரென பின்னால் இருந்து ஓடி வந்த நகைக்கடை உரிமையாளர் ராஜா என்பவர் தனது காலணியை எடுத்து பிச்சைக்காரரின் பின் தலையில் வேகமாக தாக்கினார்.

மேலும், வயதான பிச்சைக்காரரை பார்த்து கேவலமாக திட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்த கொடூர தாக்குதலின் காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவிலும் பதிவாகி இருந்தது.

இதையும் படிங்க : 'ஒரு நாளைக்கு 4500 பேருக்கு மெட்ராஸ் ஐ வருது.. ஜாக்கிரதையா இருங்க' - அமைச்சர் எச்சரிக்கை

இந்நிலையில், இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த தாக்குதலுக்கு பொதுமக்களும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Published by:Karthi K
First published:

Tags: Crime News, Kanniyakumari