ஹோம் /நியூஸ் /Kanniyakumari /

இறுதி செலவுக்கு பணம் வைத்துள்ளதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு மனைவி, மகளுடன் நகை மதிப்பீட்டாளர் தற்கொலை!

இறுதி செலவுக்கு பணம் வைத்துள்ளதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு மனைவி, மகளுடன் நகை மதிப்பீட்டாளர் தற்கொலை!

இறுதி செலவுக்கு பணம் வைத்துள்ளதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு மனைவி, மகளுடன் நகை மதிப்பீட்டாளர் தற்கொலை!

இறுதி செலவுக்கு பணம் வைத்துள்ளதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு மனைவி, மகளுடன் நகை மதிப்பீட்டாளர் தற்கொலை!

எங்கள் மரணத்திற்கு யாரும் காரணமில்லை வாழ விருப்பமில்லாமல், நாங்கள் மூவரும் இந்த உலகத்தை விட்டு செல்கிறோம் என ரமேஷ் கடிதம் எழுதி வைத்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கன்னியாகுமரி மாவட்டம் புலியூர்குறிச்சியில் "மூவரும் இந்த உலகத்தை விட்டு செல்கிறோம்.. இறுதி செலவுக்கு 64-ஆயிரம் ரூபாய் வைத்துள்ளேன்" என கடிதம் எழுதி வைத்து விட்டு வங்கி நகை மதிப்பீட்டாளர் மனைவி மற்றும் மகளுடன் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் புலியூர்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (51). இவர் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வருகிறார்.

இவர் தனது மனைவி ரோகிணி மகள் அர்ச்சனாவுடன் புலியூர்குறிச்சியில் உள்ள தனக்கு சொந்தமான வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை அக்கா மேகலா தங்கை ரோகிணியை செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். ஆனால், அவர் அழைப்பை ஏற்காத நிலையில் நேரடியாக வீட்டிற்கு வந்துள்ளார்.

வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு ஆள் அரமில்லாமல் இருந்துள்ளது. இதனால், சந்தேகமடைந்த மேகலா உடனடியாக தக்கலை போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்து அங்கு வந்த போலீசார் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது ரமேஷ் கடிதம் ஒன்றை எழுதி அதன் மேல் பணம் மற்றும் பைக் சாவியை வைத்து விட்டு தனது மனைவி மேகலாவுடன் வீட்டின் அறையில் மின் விசிறியில் சேலையில் தூக்கிட்டபடி சடலமாக காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மற்றொரு அறையில் மகள் அர்ச்சனா விஷமருந்தி இறந்த நிலையிலும் காணப்பட்டார். கடிதத்தை கைப்பற்றிய போலீசார் அருகில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் ரமேஷின் மனைவி புற்றுநோயால் அவதிப்பட்டு வந்ததாகவும் தான் வேலைக்கு சென்று விடுவதால் மனைவியை சரிவர கவனிக்க முடியாமல் தவித்து வந்துள்ளார்.

வீட்டருகே அடுத்தடுத்த வீடுகளில் அவரது அக்கா மற்றும் அண்ணன் வசித்து வரும் நிலையில் அவர்களும் ஆதரவாக இல்லாததால் ரமேஷ் மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலையில் தான் ரமேஷ் எங்கள் மரணத்திற்கு யாரும் காரணமில்லை வாழ விருப்பமில்லாமல், நாங்கள் மூவரும் இந்த உலகத்தை விட்டு செல்கிறோம். நாங்கள் மூவரும் சென்ற பின் வீட்டை மனைவியின் அக்கா மேகலா முருகன் அவர்களுக்கு உரிமையாக்குகிறேன் என்று எழுதப்பட்டிருந்ததோடு, அண்ணன் மகாத்மா என்ற காந்திக்கும் அக்கா கணவர் ஸ்ரீகுமாருக்கும் 8-அடி பாதையை ரெஜிஸ்டர் பண்ணி கொடுக்கவும் என்றும் இறுதி செலவுக்கு 64-ஆயிரம் ரூபாய் வைத்துள்ளதாகவும் எங்கள் மரணத்திற்கு பின் இந்த வீடும், இடமும் பைக்கும் மேகலா முருகனுக்கு உரிமையாக்குகிறேன் என்றும் கடிதம் எழுதி வைத்து விட்டு ரமேஷ் குடும்பத்தினருடன் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

இதனையடுத்து அண்ணன் மகாத்மா கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் மூவரின் சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

புற்று நோயால் மனைவி அவதியுற்ற நிலையில் நகை மதிப்பீட்டாளர் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published by:Esakki Raja
First published:

Tags: Kanyakumari, Suicide