கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி கடந்த நவம்பர் மாதல் 21-ம் தேதி வீட்டில் இருந்து மாயமானார். வீட்டில் இருந்த 5 சவரன் தங்க நகை, ரூ60,000 ரொக்கப்பணம் மற்றும் செல்போனுடன் சிறுமி திடீரென மாயமானார்.
இதுகுறித்து சிறுமியின் தந்தை குளச்சல் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். வீட்டில் இருந்து மாயமான சிறுமியின் செல்போன் எண் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்ட நிலையில் அவர் கடைசியாக யாருடன் பேசினார் என்ற விவரங்களை போலீஸார் சேகரித்தனர். அதில் ஒரு செல்போன் எண் சத்தியமங்கலம் வனப்பகுதியில் இயங்குவது தெரியவந்தது.
இதனையடுத்து டிசம்பர் 5-ம் தேதி காலை சத்தியமங்கலம் வனப் பகுதிக்கு சென்ற போலீசார் அங்குள்ள பங்களா வீட்டை சுற்றி வளைத்து சோதனை செய்தனர். அப்போது மாயமான பள்ளி மாணவியும் வாலிபர் ஒருவரும் தனிமையில் இருந்த நிலையில் இருவரையும் பிடித்து குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க : சரசரவென சரிந்த மண்.. புதைந்த பஸ்.. உயிரிழந்த 34 பேர்.. கொலம்பியாவில் சோக சம்பவம்!
இன்ஸ்டாகிராம் காதல்:
விசாரணையில் அந்த வாலிபர் திருப்பூர் வைக்கல்மேடு பகுதியை சேர்ந்த 22-வயதான லச்சி பிரபு என்பது தெரியவந்தது. பைக் மெக்கானிக் ஆன இவருக்கும் பள்ளி மாணவிக்கும் இன்ஸ்டா கிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது பள்ளி மாணவிக்கும் பைக் மெக்கானிக் லச்சி பிரபுவுக்கும் தாய் இல்லாத நிலையில் இருவரும் உணர்ச்சி பூர்வமாக இன்ஸ்டாவில் உரையாடிய நிலையில் இந்தப்பழக்கம் காதலாக மாறியது.
கன்னியகுமரியில் சந்திப்பு:
இதனையடுத்து இருவரும் அடிக்கடி கன்னியாகுமரியில் சந்தித்து கணவன் மனைவி போல் தனிமையில் இருந்து வந்ததும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் 21-ம் தேதி திருப்பூரில் இருந்து கன்னியாகுமரிக்கு வந்த லச்சி பிரபு மாணவிக்கு போன் செய்து வீட்டில் இருந்து பணம் மற்றும் நகையுடன் வந்தால் இருவரும் எங்கேயாவது சென்று குடும்பம் நடத்தாலாம் என்று ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். இதனையடுத்து மாணவியும் வீட்டில் இருந்த 5-சவரன் தங்க நகை, ரூ 60,000 ரொக்க பணத்தையும் எடுத்துக்கொண்டு கன்னியாகுமரிக்கு சென்றுள்ளார்.
அங்கு இருவரும் அறையெடுத்து தங்கிய நிலையில் அடுத்த நாள் திருப்பூருக்கு சென்ற அவர்கள் நண்பர்கள் உதவியுடன் நகைகளை அடகு வைத்து சத்தியமங்கலம் வனப்பகுதிக்கு சென்று அங்குள்ள கோயிலில் மாலை மாற்றி திருமணம் செய்தனர். அங்கேயே ஒரு பங்களா வீட்டை வாடகைக்கு எடுத்து குடித்தனம் நடத்தியதும் தெரியவந்தது
இதையடுத்து லச்சி பிரபு வை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த ரூ.15,000 மற்றும் அடகு வைத்த தங்க நகைகளை மீட்டதோடு மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லச்சி பிரபு வை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Instagram, Kanyakumari, Local News, Love, Tamil News