ஹோம் /நியூஸ் /கன்னியாகுமரி /

வெளிநாட்டவர் உருவாக்கிய வழியில் கல்வி பயின்றதால் இந்திய வரலாறு மறைக்கப்பட்டுள்ளது - ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

வெளிநாட்டவர் உருவாக்கிய வழியில் கல்வி பயின்றதால் இந்திய வரலாறு மறைக்கப்பட்டுள்ளது - ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

ஆர்.என்.ரவி

ஆர்.என்.ரவி

R.N.Ravi | வெளிநாட்டவர் உருவாக்கிய வழியில் படித்ததால் இந்திய வரலாறு மறைக்கப்பட்டு உள்ளது. அதனை நாம் மீட்டெடுக்க வேண்டும்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Kanniyakumari, India

  வெளிநாட்டவர் உருவாக்கிய வழியில் நாம் கல்வி பயின்றதால் இந்திய வரலாறு மறைக்கப்பட்டுள்ளதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவிவித்துள்ளார்.

  கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்த தினத்தை கொண்டாடும் நிகழ்ச்சி நாகர்கோவில் அருகேயுள்ள இறைச்சகுளம் பகுதியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, “தமிழகத்துடன் கன்னியாகுமரி இணைந்த நாளை நாம் திருவிழாவாக கொண்டாட வேண்டும். நமக்காக பாடுபட்ட மக்களை இந்த நாளில் எண்ணிப்பார்க்க வேண்டும்” என தெரிவித்தார்.

  மேலும், “வெளிநாட்டவர் உருவாக்கிய வழியில் படித்ததால் இந்திய வரலாறு மறைக்கப்பட்டு உள்ளது. அதனை நாம் மீட்டெடுக்க வேண்டும். இந்தியாவை உலக நாடுகள் உன்னிப்பாக பார்த்து வருகிறது” என்று கூறினார். மேலும் 2047ல் இந்தியா வளர்ச்சி அடைந்துவிடும் என பிரதமர் கூறியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

  இதையும் படிங்க : ஆளுநருக்கு எதிராக அடுத்த அஸ்திரத்தை எடுக்கும் திமுக.. கூட்டணி கட்சிகளை திரட்டி குடியரசு தலைவரிடம் மனு அளிக்க முடிவு

  தொடர்ந்து, “இந்த தினத்தை ஒட்டி நடந்த போரில் ரத்தம் சிந்திய மக்களை எண்ணி பார்க்க வேண்டும். குமரி மாவட்டம் ஒரு புண்ணிய பூமி. நாம் எதற்காக இந்திய வரலாற்றை எழுத வேண்டுமென சிந்திக்க வேண்டும்.

  வெளிநாட்டவர் உருவாக்கிய வழியில் படித்த போதிலும் இந்திய வரலாறு மறைக்கப்பட்டுள்ளது மாற்றப்பட்டுள்ளது. அதனை நாம் மீட்டெடுக்க வேண்டும் என காந்தியடிகள் கூறியதை மறக்கக்கூடாது. 2047 ஆம் ஆண்டு நாம் வளர்ச்சி அடைந்து விடுவோம் என பிரதமர் கூறியுள்ளதை இளைஞர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்” என்று அவர் கூறினார்.

  இதையும் படிங்க : சென்னை வந்துவிட்டு ஸ்டாலினை சந்திக்காமல் போக முடியுமா? - மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி கலகல பேட்டி

  இந்நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், நாகர்கோவில் சட்டமன்ற பாஜக உறுப்பினர் எம்.ஆர்.காந்தி மற்றும் இந்த அமைப்பு சார்ந்தவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

  Published by:Karthi K
  First published:

  Tags: Kanniyakumari, RN Ravi, Tamilnadu